இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

- தமிழ் திரைப்படங்கள் வெளியாகும் நாளில் இருந்த ஒரு வாரத்திற்கு தினசரி 6 காட்சிகள் (காலை 6 மணி முதல் மறுநாள் காலை 2.30 மணி வரை) திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி. மேலும் உள்ளுர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை, சனி, ஞாயிறு கிழமைகளிலும் 6 காட்சிகள் திரையிடலாம்.
- டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை நடத்திய அத்துமீறிய தாக்குதல் தொடர்பான வழக்குகளுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும். – உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு!
- குண்டர் தடுப்புக் காவல் உத்தரவில் தவறு! உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டார் அருண் ஐபிஎஸ்! மன்னிப்புக் கேட்பதால் தவறு சரியாகிவிடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்! குண்டர் தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் முடிவில் தலையிடவில்லை! அருணின் மன்னிப்பை ஏற்று, அவருக்கு எதிராக உயர்நீதிமன்றம் தெரிவித்த சில கடுமையான கருத்துகளை நீக்கியது உச்சநீதிமன்றம்!
- 2001-06 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது முறைகேடாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. வழக்கிலிருந்து அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள் உள்பட 7 பேரையும் விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு.
- கடலுக்கு அடியில் டேட்டா சென்டர்! தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் சீனா! செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் டேட்டா சென்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதற்கான மின்சாரம் மற்றும் குளிர்விப்பு செலவுகளைக் குறைக்கும் வகையில் சீனா புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
- வடகொரியா திங்கட்கிழமை அதிநவீன ஏவுகணைச் சோதனையை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. தொலைதூர இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் சோதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.. இதற்கு முந்தைய நாளே கொத்துக் குண்டுத் தலைகளையும் வடகொரியா சோதித்துள்ளது.. இரு நாடுகளின் எல்லையில் கண்ணிவெடி வெடித்து தென்கொரிய வீரர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.. அடுத்தடுத்த ராணுவ நடவடிக்கைகளால் வடகொரியா–தென்கொரியா இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது
- இந்தியா ஒன்றும் மோடியின் அப்பாவுக்குச் சொந்தமானது அல்ல. இந்துக்களும் இஸ்லாமியர்களும் சீக்கியர்களும் கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்துதான் இந்த நாட்டை உருவாக்கினார்கள். மோடிக்கு முன் இருந்த இந்தியாவை மீட்டுக் கொண்டுவர வேண்டும். -நேகா பாரதி, சமூக செயற்பாட்டாளர்
- கேரள அரசின் முன் அனுமதியின்றி இமாச்சலப் பிரதேசத்திலிருந்து ஒரு யுனிட் மின்சாரத்தை ரூ14.50 என்ற அதிக விலைக்கு வாங்கியதால் கேரள மாநில மின்சார வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து எம்.ஜி.ராஜமாணிக்கம் திடீரென நீக்கம்.
