சினிமா செய்திகள்
’வாரிசு’ டிரைலர் ரிலீஸ் தேதி, சென்சார் தகவல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தின் டிரைலரை எதிர்பார்த்து அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த தகவல்களை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தளபதி விஜய் நடித்த 66வது திரைப்படமான ’வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழுவினர் தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ஜனவரி 1-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிசம்பர் 31ம் தேதி இரவு அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானதை அடுத்து ’வாரிசு’ படத்தின் டிரைலர் ஜனவரி 2ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஆனால் ஜனவரி 2-ஆம் தேதியும் டிரைலர் வெளியாகவில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் சற்று முன்னர் ’வாரிசு’ படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு சன் டிவியின் யூடியூப் பக்கத்தில் வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் நாளை வெளியாக இருக்கும் ட்ரெய்லர் வீடியோவை மிகப்பெரிய அளவில் வைரலாக்க தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ’வாரிசு’ திரைப்படம் சென்சார் முடிந்து விட்டதாகவும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனை அடுத்து ’வாரிசு’ திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதாகவும் படம் ரிலீசாக வேண்டியது மட்டுமே பாக்கி என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசையில், கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#VaaThalaivaa it’s time for #VarisuTrailer 🔥
Releasing Tomorrow at 5 PM on @SunTV YouTube channel 💥See ‘U’ soon nanba 😁#VarisuGetsCleanU#Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman @iamRashmika @7screenstudio @TSeries #Varisu #VarisuPongal pic.twitter.com/OAm0gBhV48
— Sri Venkateswara Creations (@SVC_official) January 3, 2023