சினிமா செய்திகள்
’தெலுங்கு வாடை ரொம்ப ஓவரா இருக்குதே.. அதற்குள் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பெற்ற ‘வாரிசு’

தளபதி விஜய் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்றால் ‘வாரிசு’படத்தை தான் கூறவேண்டும். கடந்த சில வருடங்களாக அவர் அதிரடி ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் குடும்ப சென்டிமென்ட் கலந்த திரைக்கதை அம்சம் கொண்ட ‘வாரிசு’படத்தில் நடித்துள்ளார்.
முதல் பாதி முழுவதும் குடும்ப சென்டிமெண்ட் மற்றும் கலகலப்பான நகைச்சுவையாகவும் இரண்டாம் பாதி அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ஆகவும் இருக்கும் என்று கூறப்படும் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது.
எதிர்பார்த்தது போலவே இந்த படத்தில் குடும்ப சென்டிமெண்ட் காட்சிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது. அதேபோல் தமனின் இசை, வம்சியின் இயக்கம் என ஒட்டுமொத்தமாக அனைத்துமே பாசிட்டிவாக தெரிவதால் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் வாரிசு படத்தின் டிரைலரை பார்த்த சில ரசிகர்கள் தெலுங்கு வாடை அதிகமாக இருப்பதாகவும் மகேஷ்பாபு அல்லு அர்ஜுன் படத்தை பார்த்ததுபோல் இருப்பதாகவும் தளபதி விஜய்யின் பாணி இந்த படம் இல்லை என்றும் நெகட்டிவ் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த டிரைலரில் பஞ்ச் டயலாக்குகள் தெலுங்கு வசனம் போலவே இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். டிரைலர் வெளியாகி ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மொத்தத்தில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் நடுநிலை ரசிகர்களின் கருத்து வெளிவந்த பின்னர் தான் ‘வாரிசு’ டிரைலருக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பது தெரியவரும்.