சினிமா
இந்த பூனையும் பால் குடிச்சிடுச்சே! புத்தாண்டில் லிப் லாக் வீடியோவால் சிக்கிக் கொண்ட தமன்னா!

நடிகை தமன்னா 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கார்த்தியுடன் பையா படத்தில் நடித்த நிலையில் இருவரும் காதலிக்கின்றனர் என கிசுகிசு கிளம்பியது. ஆனால், உடனடியாக நடிகர் கார்த்திக்கு திருமணம் செய்து வைத்து அடடா மழைடா ரிலேஷன்சிப்புக்கு எண்ட் கார்டு போட்டு விட்டதாக தகவல்கள் பரவின.
அதன் பின்னர் நடிகை தமன்னாவை பற்றி பெரியளவில் எந்தவொரு கிசுகிசு கூட வராத நிலையில், இவருக்கும் வயசாகிட்டே போகுதே எப்போ திருமணம் செய்து கொள்வார் என்றும் இல்லை த்ரிஷா போலவே இவரும் முரட்டு சிங்கிளாக மாறிடுவாரா என கேள்விகள் கிளம்பின.
இந்நிலையில், இந்த பூனையும் பால் இல்லை ஃபாரின் சரக்கே அடிக்கும் என்பது போல புத்தாண்டு அதுவுமாக தனது காதலருடன் லிப் லாக் அடிக்கும் வீடியோ சிக்கிடுச்சு. நண்பர்கள் புத்தாண்டு தினத்தில் எதார்த்தமாக எடுத்த வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் அதிக படங்களில் தொடர்ந்து ஓடுதோ ஓடலையோ நடித்து வருகிறாரே தமன்னா என்ன மேட்டர் என பார்த்தால் இப்போது தான் தெரியுது பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உடன் தான் தமன்னா காதலித்து வருகிறார் என்றும் அவருடன் தான் நியூ இயரில் அப்படியொரு முத்த மழை பொழிந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
நடிகைகள் நயன்தாரா, ஹன்சிகா எல்லாம் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த ஆண்டு தமன்னாவுக்கும் விஜய் வர்மாவுக்கும் திருமணம் நடைபெறுமா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.