டிவி
ஈடுபாடு இல்லாதவர்கள் இவர்கள் தான்.. கண்ணாடி ஜெயிலில் அடைத்த பிக்பாஸ்!
Published
2 years agoon
By
seithichurul
பிக்பாஸ் வீட்டில் ஈடுபாடு இல்லாமல் இருக்கும் இருவரைப் பிடித்து, கண்ணாடி ஜெயிலில் அடைத்துள்ளார் பிக்பாஸ்.
பீக்பாஸ் சீசன் 4-ன், 11வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டில் ஈடுபாட்டுடன் இல்லாத இருவர்களைத் தேர்வு செய்யச் சொல்கிறார் பிக்பாஸ்.
வீட்டில் உள்ள அனைவரும் ஒருமனதாக, ஜித்தன் ரமேஷ் மற்றும் ஷிவானியை தேர்வு செய்கின்றனர். இப்படித் தேர்வு செய்யப்பட்ட இருவரையும் பிக்பாஸ் வீட்டில் உள்ள கண்ணாடி ஜெயிலில் அடைத்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் தாங்கல் எவ்வளவு உள்ளடக்கங்களை நிகழ்ச்சிக்கு வழங்குவார்கள் என்பதைத் தான், பிக்பாஸ் விரும்புவார். அப்படி உள்ளடக்கங்களைத் தராதவர்களை மக்களே பெரும்பாலும் வெளியேற்றி விடுவார்கள். இதை நாம் பல முறை முந்தைய சீசன்களில் பார்த்துள்ளோம்.
ஆனால், பிக்பாஸ் சீசன் 4-ல் புதிதாக, ஈடுபாட்டுடன் இல்லாதவர்களைக் கண்ணாடி சிறையில் பிக்பாஸ் அடைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் உள்ள பாலாஜியே, எதற்கெடுத்தாலும் அந்த பெண்ணை இப்படி செய்துவிடுகிறார்கள் என்று பேசுகிறார்.
இந்த வார நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில், மிகவும் ஈடுபாட்டுடன் பங்கேற்றுச் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஷிவானி என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் இருவரும் யார் மனதையும் புண்படுத்தும் படி எதுவும் செய்வதில்லை. நேற்றைய நிகழ்ச்சியில் ஆஜித்தின் எக்ஷன் பாசை விளையாட்டாக ஏமாற்றி விளையாடி இருந்தாலும், ஜித்தன் ரமேஷ் அதை திருப்பி அளிக்கக் கூறிவிட்டார்.
நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. இப்படி எந்த தவறும் செய்யாத இருவரை, ஒரு போட்டிக்காகச் சிறையில் அடைப்பது எந்த விதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை. மேலும் ஒரு போட்டிக்காக இருவரின் தனிநபர் சுதந்திரத்தை பறித்து, சிறையில் அடைக்க பிக்பாஸ்க்கு அதிகாரம் உள்ளதா? மனித உரிமை ஆணையங்கள் என்ன செய்கின்றன.
இது நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களை எந்த அளவுக்குப் பாதிக்கும். அவைகளையும் இப்படி வீட்டில் சிந்திக்க வைக்காதா? இது தனி மனித உரிமை மீறல் இல்லையா பிக்பாஸ்? கமல் இதை பற்ற நாளை பேசுவாரா? மனித உரிமைக்காகப் போராடும் அமைப்புகள் இதை கண்டிக்க வேண்டுமா? உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
You may like
-
அசீம்-மோடி, விக்ரமன் – ராகுல் காந்தி.. கமல் – சுப்ரீம் கோர்ட்: பிக்பாஸை ஒப்பிட்ட நெட்டிசன்!
-
பணப்பெட்டியை எடுத்து செல்லும் போட்டியாளர் யார்? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு
-
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜிபி முத்துவுக்கு அடித்த ஜாக்பாட்!
-
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராமின் சம்பளம் எவ்வளவு?
-
இந்த வாரம் டபுள் எவிக்சன்; வெளியேறிய 2 பிக்பாஸ் போட்டியாளர்கள் இவர்கள் தான்!
-
எதிர்பாராத திருப்பம்.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுபவர் இவரா?