இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

- இந்தியாவில் 2031ல் ராகுல் காந்தி பிரதமராகவில்லையென்றால் என்னிடம் வாங்கிய 5000 கோடி பணத்தை திருப்பித்தர வேண்டும் – எலான் மஸ்க்.
- 2100-ம் வருஷத்துக்குள்ள மனுஷ குலத்துக்கே பெரிய அழிவு வரலாம்னு லான்செட் ஆய்வறிக்கையில எச்சரிக்கை விடுத்திருக்காங்கன்னு தகவல் வெளியாகியிருக்கு. அணு ஆயுத போர் பதற்றம், AI-யை தவறான வழியில பயன்படுத்துறது, காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு உட்பட மொத்தம் 17 முக்கிய அச்சுறுத்தல்கள் இதுக்கு காரணமா சுட்டிக்காட்டப்பட்டிருக்கு.
- கோதாவரி–காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் ஆந்திர முதல்வர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும், கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு கூடுதல் நீர் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
- ஆய்வுகள் மற்றும் வகுப்பறைக் கண்காணிப்பு நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கும் பள்ளிப் பார்வை 3.0 செயலி.
- உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (Supreme Court Bar Association) சார்பாக நீதிமன்ற வளாக பூங்காவில் இன்று (13.10.2026) மதியம் 1.15- மணிக்கு மௌனம் (அமைதி ) காக்கும் வடிவத்தில் இயக்கம் மேற்கொண்டனர். தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யக்கோரி இயக்கம் நடத்தியவர்கள் மீது யாருடைய பேச்சைக்கேட்டு டெல்லி போலீஸ் நடந்து கொண்டதோ அவர்களுக்கு எதிராகவும், போராட்ட காரர்களுக்கு ஆதரவாகவும் இந்த ” மௌன போராட்டம் ” (Silent Protest) என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
- சென்னையில் வரலாற்றுப் புகழ் பெற்ற சீரணி அரங்கம் இடிக்கப்பட்டது போல, டெல்லியில் ஜனநாயகத்தின் குரலை எழுப்புவதற்காக பல அமைப்புகளும் கூடி வந்த ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இனி யாரும் கூடக்கூடாது என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. மக்கள் தங்கள் உரிமைகளைக் கோரிப் போராடுவதற்காக கூடும் இடங்களை, சர்வாதிகாரக் கூறு கொண்ட ஆளும் வர்க்கத்தினர் ஜனநாயகத்தின் குறியீடுகளாகப் பார்க்கின்றனர். அதனாலேயே அவற்றை அழித்தொழிக்கின்றனர்.
- அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்து நடத்துவது தொடர்பான வழக்கு ஒன்றில், “ஒவ்வொரு அரசு மருத்துவரும் தனியே கிளினிக் வைத்து நடத்துகிறார்” என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கடுமையான கருத்தை பதிவு செய்துள்ளது.
- ஓட்டு திருடும்போது அனுமதி பெறாத உங்களிடம் போராடுவதற்கு நாங்கள் எதற்கு அனுமதி வாங்க வேண்டும்? அரசியல் சட்ட அமைப்பில் அனுமதி இருக்கிறது போராடுவதற்கு. – நேகா போரா
- காடுகளின் ஒலியைக் கேட்டு அதன் ஆரோக்கியத்தைக் கண்டறியும் பெண் விஞ்ஞானிக்கு 2026-ஆம் ஆண்டின் Pritzker Environmental Genius Award! உலகின் வெப்பமண்டலக் காடுகளில் வாழும் உயிரினங்களின் ஒலிகளைப் பதிவு செய்து, அவற்றின் மூலம் காடுகளின் பல்லுயிர்த்தன்மையை ஆய்வு செய்துவரும் சுஸானா புரிவலோவா (Zuzana Buřivalová) அவர்களுக்கு, 2026 அக்டோபர் 8 அன்று Pritzker Emerging Environmental Genius Award வழங்கப்பட்டது.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் 11.5 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்துக்கு இணையான உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்.
- இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வுதியத் திட்டம் இனி பிரதமர் சமூகப் பேரவை உதவித்திட்டம் என பெயர் மாற்றம் – ஒன்றிய அரசு உத்தரவு.


