சினிமா செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜிபி முத்துவுக்கு அடித்த ஜாக்பாட்!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த ஜிபி முத்து இரண்டே வாரங்களில் வெளியேறிவிட்ட நிலையில் அவருக்கு தற்போது அதே விஜய் டிவியில் ஜாக்பாட் அடித்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் அவர்களில் ஒருவர் ஜிபி முத்து என்பதும் தெரிந்ததே. ஜி பி முத்து கள்ளம் கபடமில்லாமல் கமல்ஹாசன் உள்ளிட்ட அனைவரிடமும் நகைச்சுவையாக பேசியதை அடுத்து அவர் நிச்சயம் இறுதிப் போட்டி வரை முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென அவரது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தற்போது அவர் 4 திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் விஜய் டிவியில் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்களில் கலந்து கொண்ட பலர் திரையுலகில் தற்போது ஜொலித்து வரும் நிலையில் நான்காவது சீசனுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் விஜய் டிவி தற்போது நான்காவது சீசன் புரமோ வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அதில் ஒரு ஆச்சரியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. அதுதான் ஜிபி முத்து இந்த நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாக வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த தரமான Season-க்கு ரெடி ஆகுங்கள் ???? #CookuWithComaliSeason4 #CookuWithComali4 #CWC #VijayTelevision #VijayTV pic.twitter.com/GbqGAP4rNE
— Vijay Television (@vijaytelevision) January 6, 2023
வழக்கம்போல் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகிய இரண்டு செஃப்கள் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் ரக்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை, சுனிதா உள்ளிட்ட கோமாளிகள் கலந்து கொள்ள நிலையில் ஜிபி முத்துவும் ஒரு கோமாளியாக பங்கேற்க உள்ளார் என்பது இந்த புரமோ மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் கூடுதல் பிரபலமடைவா என்றும், அதனால் அவருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு கிடைத்த வாய்ப்பு ஒரு ஜாக்பாட் என்றும் கூறப்பட்டு வருகிறது.