சினிமா
பிக்பாஸ் 9: கன்சஷன் ரூமில் கதறி அழுத சாண்ட்ரா – வைரலாகும் உணர்ச்சி பொங்கும் வீடியோ!

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள சாண்ட்ரா கதறி அழும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 50 நாட்களை கடந்த பிக்பாஸ் பயணம் இப்போது திடீர் திருப்பங்களுடன் மேலும் சுவாரஸ்யமாகி வருகிறது.
ஒவ்வொரு நாளும் சண்டைகள், கருத்து வேறுபாடுகள், குழு பிளவுகள் போன்றவை நிகழ்ச்சியின் திரையை கிளப்பி வருகின்றன. இதனிடையே, யார் வின்னராக மரியாதை பெறப் போகிறார்கள் என்ற கேள்வி பார்வையாளர்களிடையே சூடு பிடித்துள்ளது. குறிப்பாக கானா வினோத் இந்த சீசனின் ஃபேவரைட் போட்டியாளராக பேசப்பட்டு வருகிறார். அவர் தான் இறுதியில் பட்டம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
ஆனால், 50 நாட்களை கடந்தும் நிகழ்ச்சியில் ‘மாஸ்’ இல்லை என சில நெட்டிசன்கள் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். தேவையில்லாத சண்டைகளை உருவாக்கி ட்ராமா செய்ய முயற்சிகள் இல்லை என்று கூறி, பார்வதியின் செயல்களும் அதிகம் எரிச்சலை ஏற்படுத்துவதாக கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுவாக தம்பதியர்களாக பிக்பாஸ் வீட்டில் காலடி வைத்த பிரஜினும் சாண்ட்ராவும் ‘நாங்கள் தனித்தனி போட்டியாளர்கள்’ என்று கூறினாலும், ஒரே பக்கம் விளையாடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்தது. இதையடுத்து, பிரஜின் சாண்ட்ராவை விட தனியாக விளையாட முயற்சி செய்கிறார் என்ற தகவலும் பரவியது.
இந்நிலையில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சாண்ட்ரா, கன்சஷன் ரூமில் பிக்பாஸிடம் பேசும்போது கதறி அழுதபடி வீட்டை விட்டு வெளியேற விரும்புவதாக தெரிவித்தார்.
அதற்கு பிக்பாஸ்,
“உங்கள் அப்பா இருந்திருந்தால் இன்று நீங்கள் வந்திருக்கும் நிலைக்கு பெருமைப்பட்ந்திருப்பார்.”
“உங்கள் குழந்தைகளுக்காக வலிமையாக இருங்கள்.”
“வீட்டிற்குச் சென்றால் கணவன்–மனைவி உறவை பேணுங்கள்; ஆனால் இங்கு கேம் வேறுபட்டது, அதை தனியாக விளையாட வேண்டும்.”
என்று நிதானமாக புரியவைத்து, அழுகையை துடைத்துக் கொண்டு மீண்டும் நம்பிக்கையுடன் விளையாடுமாறு ஊக்கமளித்தார்.
பிக்பாஸிடம் பேசிய பின் வெளியே வந்த சாண்ட்ரா தனது குழுவினரிடம் நடந்தவற்றை பகிர்ந்து கொள்ளும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.












