இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

- நவம்பர் 1 முதல் செல்போன் அழைப்புகளில் அழைப்பவரின் பெயர் கட்டாயம். CNAP வசதி மூலம் அழைப்பவரின் பெயர், எண் திரையில் தோன்றும் என மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை தகவல். 4G, 5G நெட்வொர்க்குகளில் இந்த வசதி செயல்பாட்டில் உள்ளது. சிம் வாங்கும்போது சமர்ப்பித்த KYC ஆவணத்தின் அடிப்படையில் பெயர் காட்டும். மற்றவர்கள் சேமித்த பெயர்களுக்குப் பதிலாக அதிகாரப்பூர்வ பெயரே காட்டும். போலி அழைப்புகள், ஆன்லைன் மோசடியை கட்டுப்படுத்த நடவடிக்கை
- மக்களின் போராட்டத்தை முடக்கினால் அரசுக்கு எதிரான அதிருப்திதான் அதிகரிக்கும்! போராட்டத்துக்கு அனுமதி அளிக்க மறுத்த தவெக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! CJP போராட்டத்தின் போது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மெட்ரோ சேவை, இணைய சேவை முடக்கப்பட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது டெல்லி காவல்துறை. வேண்டுமென்றே உத்தரவை மீறவில்லை. எனவே அவமதிப்பு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி காவல் ஆணையர் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல்.
- தேர்தலை நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் முக்கிய பணி. அதற்கான ஆவணங்களைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. வீடியோவைத் தொலைத்து விட்டதாக எப்படி கூற முடியும்? வெற்றி பெற்ற வேட்பாளரிடம் கொடுத்து விட்டீர்களா? வீடியோ பதிவுகளை காணவில்லை என்ற சாக்குப்போக்கு காரணங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டாம் – கர்நாடக மாநிலம் சிருங்கேரி தொகுதியில் நடந்த வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்.
- ஈரான் மீது பெரிய தாக்குதல் தொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக இன்று 15.10.2026- வியாழன் ராய்ட்டர்ஸ் (Reuters ) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை கண்டிராத மேம்படுத்தப்பட்ட GBU-43/B என்ற வெடிகுண்டு என்றும் இது அனைத்து குண்டுகளுக்கும் தாய் ( Mother of all bombs) என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், ஈரானின் மின் உற்பத்தி, அணு ஆயுத மையம் அவற்றின் மீது வீசப்படும் என்று USA தெரிவித்துள்ளது.
- மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கும் கரப்பான் பூச்சி கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே வரும் 2029ல் மு.க.ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கனடா நாட்டு குடியுரிமை கொண்டிருக்கும் நடிகர் அக்ஷய் குமார் மோடியை சமூக வலைதளத்தில் புகழ்வதற்கு பெயர் அரசியல் செயல்பாடு இல்லையா? பாஜகவுக்கு ஆதரவான செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்போது பாஜகவுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? மும்பை போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக அமெரிக்க குடியுரிமை கொண்டிருக்கும் நடிகர் இம்ரான்கான் இந்தியாவை விட்டு வெளியேறும்படி மும்பை காவல்தறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறித்து மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் புஷன்.
- இந்து மத பிற்படுத்தப்பட்ட பிரிலிருந்து இஸ்லாமிற்கு மாறியவர்களுக்கு பிசி முஸ்லீம் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணையை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. தமிழ்நாட்டில் தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கை முறையாகக் கையாளத் தவறியதே இந்த வரலாற்றுப் பின்னடைவுக்கு முக்கியக் காரணம் என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
- திருப்பதி நெய் மோசடி வழக்கில் அதிரடி நடவடிக்கை! திருப்பதி நெய் மோசடி வழக்கில் இரு டெய்ரி நிறுவனங்களின் ₹132 கோடி சொத்துக்கள் முடக்கம்! விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
- தில்லி கனாட் பகுதியிலுள்ள சென்ட்ரல் பார்க்கில் அக்டோபர் 16 மாலை 5 மணிக்கு மீண்டும் போராட்டத்தை அறிவித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. போராட்டத்திற்கு வருவோர் தேசியக்கொடியுடன் வர வேண்டும் எனவும் தில்லிக்கு வரமுடியாதவர்கள் அவரவர் பகுதிகளிலேயே தேசியக்கொடி அணிவகுப்பை நடத்துங்கள் எனவும் சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே வேண்டுகோள்.
- தமிழ்நாடு ரேஷன் கடைகளில் விநியோகிக்ககப்படும் பாமாயில் சப்ளைக்கு இடைக்காலத்தடை விதித்து இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். டெண்டர் எடுத்த நிறுவனங்களுக்கு விகிதம் பிரிப்பு சரியாக இல்லை என கே.டி.வி.ஹெல்த் ஃபுட் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
- பெரம்பூர் தொகுதி வெற்றிக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி விஜய் தொடர்ந்த மனு! தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்!
- மயிலாடுதுறை: சித்தர்காட்டில் அரிசி ஆலைக்கு எதிராக சுடுகாட்டில் போராட்டம் நடத்த அனுமதி: உயர்நீதிமன்றம். போராடும் போது தகனம் செய்ய உடல் ஏதும் வந்தால் தகனம் செய்ய எந்த இடையுறும் இருக்கக்கூடாது – உயர்நீதிமன்றம்.
- பிரான்ஸில் அதிர்ச்சி! சூப்பர் மார்க்கெட் Fridge-களில் சைபர் தாக்குதல்! பிரான்சில் 350-க்கும் மேற்பட்ட சூப்பர் மார்க்கெட்களில் உள்ள Fridge-களை ஹேக்கர்கள் ஹேக் செய்து வெப்பநிலையை 50 டிகிரி வரை உயர்த்தியதால் பரபரப்பு! இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் வீணானதோடு, சில இடங்களில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இது AI தாக்குதல் அல்ல, பழைய மென்பொருளை பயன்படுத்தியதால் நடந்த சைபர் தாக்குதல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிரான ராகுல் காந்தியின் வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒன்றிய அமைச்சர் பதவிக்கு மாற்றப்படலாம் எனத் தகவல்கள் பரவி வருகின்றன.
- மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான நீர்திறப்பு இன்றுடன் நிறுத்தம்! சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர்! தவெக அரசு தங்களைக் கைவிட்டுவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிப்பதாகத் தகவல்.
- தென்னிந்தியப் பகுதிகளில் இன்று வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது. இந்த ஆண்டு சராசரியை விட கூடுதல் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்
- ஆந்திராவின் ராமகிரி மலை சுரங்கத்தில் தங்கம் இருப்பதாக யூடியூப்பில் பரவிய வீடியோ! தங்கம் தேடி சுரங்கத்தில் கயிறு கட்டி இறங்கிய நபர் சிக்கியதால் பரபரப்பு. போராடி அவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
- சி.எம்.விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் மின்சாரத்துறை, அறநிலையத்துறை என பல்வேறு அரசு துறைகளில் ரூ.1,01,715 கோடி அளவுக்கு மெகா ஊழல் நடந்திருப்பதாக திமுக பரபரப்பு குற்றச்சாட்டு.
- இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வாகனப்புகையை மட்டும் அல்லாமல் பிரேக் மற்றும் டயர் மாசுக்களையும் கட்டுப்படுத்தும் பாரத் ஸ்டேஜ் 7 விதிகளின் வரைவு முன்மொழிவை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக கார்களின் விலை உயரக்கூடும் என தெரிய வருகிறது.


