இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

- தமிழகம் உட்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய வாக்காளர்கள், எஸ்ஐஆர் பட்டியலில் விடுபட்டவர்களைச் சேர்க்க சிறப்பு சுருக்கத் திருத்தம் (SSR) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- சற்றுமுன் ஈரானை தோற்கடிக்காவிட்டால் இஸ்ரேலின் காலம் முடிந்துவிடும் என்று நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார்.
- கோவையில் ரூ.300 கோடியில் உருவாகியுள்ள பெரியார் அறிவுலகம் நூலக கட்ட்டத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
- ஆசிரியர்களுக்கான சிறப்பு ‘டெட்’ தேர்வில் 1.10 லட்சம் பேர் தோல்வி, முதல் மற்றும் இரண்டாம் தாள் என, மொத்தமாக தேர்வு எழுதிய 2,17,519 ஆசிரியர்களில், 1,08,326 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சுமார் 1.10 லட்சம் பேர் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். சிறப்பு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், அடுத்த 5 நாட்களில், தங்களின் தகுதி சான்றிதழ்களை https://trb.tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
- இக்டோபர் 28 நவம்பர் 1 ஆகிய தேதிகளில் 128 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்துள்ள நீதிமன்றம் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவு.
- அனைத்து குண்டுகளின் தாய் என அழைக்கப்படும் ஜி.பி.யு-43-பி மாபெரும் வான்வழித் தாக்குதல் குண்டை, ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது வீசுவது குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஆராய்ந்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.


