இந்தியா
மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

தில்லியில் உள்ள விஞ்ஞான பவனில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 33வது நிறுவன நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் இந்நிகழ்வில் பேசிய வெ.ராமசுப்பிமணியன் தலைமை நீதிபதி அலுவலகம் ஒவ்வொரு நிமிடமும் அக்னி பரீட்சைக்கு உள்படுத்தப்படுகிறது. என்று பேசினார்.
மனித உரிமைகள் ஆணையம் தனது நிறுவன நாளைக் கொண்டாடும் இந்த வேளையில் புதிய சவால்களை எதிர்கொள்ள நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளவும் மனித உரிமைகள் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதற்கான நமது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தவும் நமது சேவையை மேம்படுத்த நமது ஆளுமைகளை மறுசீரமைக்கவும் உறுதியேற்க வேண்டிய நேரம் என்றும் பேசினார்.
நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி பேசியதாவது – என்எச்ஆர்சி அதன் 33 ஆண்டு கால பயணத்தில் 24 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளை பதிவ செய்துஅதில் 23 லட்சமத்“துக்கம் அதிகமான வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளது. ஒரு மனித உரிமைகள் அமைப்பின் உண்மையான அளவுகோல் அது விசாரிக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் அல்ல. மாறாக தங்களின் குரலை பதிவ செய்ய இயலாத எளிய மக்களின் குரல் அங்கே கேட்கப்படுகிறதா என்பதே அதன் உண்மையான அளவுகோல் என்று அவர் பேசினார்.


