டிவி
ஒரு டிவிட்.. சீரியலை முடிக்க சொன்ன சன் டிவி.. அதிர்ச்சியில் ராதிகா!

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில், விஜய் சேதுபதி நடிக்க இருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. இப்போது அந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார்.
விஜய் சேதுபதி இந்த சர்ச்சையில் சிக்கிய போது, டிவிட்டரில் பதிவிட்ட நடிகை ராதிகா, ‘விஜய்சேதுபதி ஒரு நடிகர். அவரை கட்டுப்படுத்தக்கூடாது. முத்தையா முரளிதரன் படத்தில் நடிக்க வேண்டாம் எனக் கூறுகிறீர்கள். உங்களுக்கு வேறு வேலை இல்லையா?.. அரசியல் பலம் உள்ளவர் ஒருவர் வைத்திருக்கும் சன் ரைசர்ஸ் கிரிக்கெட் அணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பீர்களா?’ என்று டிவிட் செய்து இருந்தார்.
சன் டிவிக்கு தான் சீரியல் செய்துக்கொண்டு இருப்பதை ராதிகா மறந்துவிட்டாரா என்று தெரியவில்லை. இந்த டிவிட்டை பார்த்த சன் டிவி குழுமம், கோபத்திற்கு உள்ளாகியுள்ளது.
உடனே, ராடான் நிறுவனத்தை அழைத்த சன் டிவி குழுமம், சித்தி 2 சீரியலை விரைவில் முடித்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளது.
மேலும், சரத் குமார் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, விரைவில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொள்ள உள்ளார் என்றும் கூறப்படுகிறது. ராதிகாவின் டிவிட்டர் பதிவு அதன் முன்னோட்டத்தையே காட்டுகிறது என்றும் கூறப்படுகிறது.




















