இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

- தவெக கூட்டணியில் பாமக? பாமக வந்தால் விசிக வெளியேறும் என அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை! பாமக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை என திட்டவட்டம்!
- தமிழ்நாட்டில் அரிசி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்காமல், அரிசி விலை உயரவே இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் கூறி வருவது கண்டிக்கத்தக்கது.”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
- தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் அறையிலும் மின்வெட்டு.
- பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக பற்பசை தயாரிக்கும் ஆலை குஜராத்தின் கட்ச் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; அங்கிருந்து ரூ.9.43 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல், 4 பேர் மீது வழக்குப்பதிவு
- டிசம்பர் 5, 2026, கார்த்திகை 19-ம் தேதி சனிக்கிழமை இரவு 10:32 மணிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கக் கணிப்புப்படி ராகு+கேது பெயர்ச்சி நிகழ்கிறது. ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு (அவிட்டம் 3-ம் பாதத்திலிருந்து 2-ம் பாதத்திற்கு) பெயர்ற்சியாகிறார். கேது பெயர்ச்சி: கேது சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கு (மகம் 1-ம் பாதத்திலிருந்து ஆயில்யம் 4-ம் பாதத்திற்கு) பெயர்ச்சியாகிறார்.
- பாகிஸ்தானை தாக்க தயாரான ஈரான் வளைகுடாவில் உச்சக்கட்ட பதற்றம்
- தமிழ்நாட்டில் ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அம்பாசமுத்திரம், பரமக்குடி உள்ளிட்ட 5 அம்ருத் பாரத் ரயில் நிலையங்களும் திறப்பு!
- சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மேம்பாட்டு சங்கத்தினரை பல்வேறு மாவட்டங்களில் வீட்டுக்காவலில் தடுத்து வைத்த போலீசார்
- பட்டியலின மக்களை காலில் விழ வைத்த கொடூரம். ஈரோடு மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளருக்கு SC, ST ஆணையம் நோட்டீஸ்!
- ஞானேஷ் குமாருக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
- மருத்துவ மையங்களில் கட்டணங்களை தெளிவாக காட்சிப்படுத்த வேண்டும்: ஒன்றிய சுகாதார செயலாளர் கடிதம்
- மின் வெட்டை சமாளிக்க தமிழக அரசு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு கொள்முதல்!
- நாடு முழுவதும் ஜந்தர் மந்தராக மாறும்: அபிஜித் திப்கே
- கோவை மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் வலசை செல்லும் பாதைகளை மறித்து சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட 13 ரிசார்ட்டுகள் மூடப்பட்டன. மேலும் 12 ரிசார்ட்டுகளை மூடுவதற்கு இறுதி கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக ஐகோர்ட்டில் கோவை ஆட்சியர் பவன்குமார் அறிக்கை.
- காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. “போதிய தண்ணீரே இல்லைன்னு கர்நாடகா சொல்லும்போது, பற்றாக்குறை நீரை எப்படி திறந்துவிடச் சொல்லி உத்தரவிட முடியும்?” என நீதிபதிகள் கேட்டுள்ளனர். தமிழ்நாடு தரப்பில், ஒவ்வொரு முறையும் குறைவாகவே தண்ணீர் திறக்கப்படுவதாக வாதிடப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக தரப்போ, நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்ட அளவை விட அதிகமாகவே காவிரி நீரை திறந்துள்ளதாக தரவுகளுடன் தாக்கல் செய்துள்ளது. இரு மாநிலங்களின் மாறுபட்ட வாதங்களை கேட்ட பிறகே உச்சநீதிமன்றம் இந்த கேள்வியை முன்வைத்துள்ளது.


