Uncategorized
Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் அல்லது கடவுச்சொல் உங்களால் மாற்றப்படாமலேயே மாறியிருப்பது, நீங்கள் பயன்படுத்தாத புதிய சாதனங்களில் இருந்து கணக்கு இயங்குவது போன்ற அசாதாரண மாற்றங்கள் தெரியும்.
மேலும், உங்கள் கணக்கிலிருந்து நண்பர்களுக்குத் தேவையற்ற செய்திகள் அல்லது links அனுப்பப்பட்டிருப்பதும், நீங்கள் பதிவிடாத பதிவுகள் வெளியிடப்பட்டிருப்பதும், சந்தேகத்திற்கிடமான நண்பர் கோரிக்கைகள் ஏற்கப்பட்டிருப்பதும் Hack செய்யப்பட்டதற்கான முக்கிய அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக கணக்கின் Settings இற்கு சென்று கடவுச்சொல்லை மாற்றுவதுடன், அறிமுகமில்லாத சாதனங்களிலிருந்து ‘Log Out of All Sessions’ கொடுத்து வெளியேற வேண்டும்.
உங்களால் கணக்கிற்குள் நுழைய முடியவில்லை எனில் facebook.com/hacked என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தின் மூலம் மீட்டெடுக்கலாம்; எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க Two-Factor Authentication வசதியை on செய்து பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்.


