Connect with us

இந்தியா

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

Published

on

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

★ மேற்கு சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான பூவிருந்தவல்லி – வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை முறைப்படி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

வழித்தடப் பின்னணி && முக்கியத்துவம்

★ சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் வழித்தடம் 4 (Corridor 4 – பூவிருந்தவல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை) பணிகள் நடைபெற்று வருகின்றன !!

★ இதில் முதல் கட்டமாக பூவிருந்தவல்லி பைபாஸ் முதல் வடபழனி வரை சுமார் 15 கி.மீ தொலைவிற்கான உயர்மட்டப் பாதை தயார் செய்யப்பட்டு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

★ போரூர் – வடபழனி ஆற்காடு சாலையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு இது மிகப்பெரிய தீர்வாக அமைந்துள்ளது.

மெட்ரோ ரயில் இயக்க நேரம் மற்றும் அட்டவணை (Train Timings & Frequency)

தினமும் காலை 07:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை ரயில் இயக்கப்படுகின்றன.

>> கடைசி ரயில் :: பூவிருந்தவல்லி மற்றும் வடபழனி ஆகிய இரு முனையங்களிலிருந்தும் இரவு 09:00 மணிக்கு கடைசி ரயில் புறப்படும்

திங்கள் முதல் சனிக்கிழமை வரை :–

07:00-08:00 & 11:00-17:00 & 20:00-21:00

ஆகிய நேரங்களில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது

08:00-11:00 & 17:00-20:00 ஆகிய நேரத்தில் 10 நிமட இடைவெளியில் மெட்ரோ இயக்கப்படும்

ஞாயிறு மற்றும் விடுமுறை நாளில்

07:00-21:00 வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் //

ரயில்கள் நின்று செல்லும் நிலையங்கள்

>> தற்போது இந்தப் பாதையில் மொத்தம் 11 உயர்மட்ட மெட்ரோ நிலையங்களில் ரயில்கள் நின்று செல்கின்றன :: 6 நிலையங்களில் மெட்ரோ ரயில் நிற்காது // போரூர் முதல் வடபழனி வரை இடமில்லாமல் இந்த மெட்ரோ ரயில் இயங்க இருக்கிறது ))

  1. பூவிருந்தவல்லி பைபாஸ்
  2. பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்
  3. பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை
  4. கரையான்சாவடி
  5. குமணன்சாவடி
  6. காட்டுப்பாக்கம்
  7. அய்யப்பன்தாங்கல்
  8. தெள்ளியரகரம்
  9. போரூர் பைபாஸ்
  10. போரூர் சந்திப்பு
  11. வடபழனி

ஆகிய 11 ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நின்று செல்ல இருக்கிறது

மெட்ரோ ரயில்கள் நிற்காமல் செல்லும் நிலையங்கள் (Non-Stopping Stations)

போரூர் சந்திப்பு முதல் வடபழனி இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள பின்வரும் நிலையங்களை ரயில்கள் நிற்காமல் கடந்து செல்கின்றன :: அங்கு பணிகள் நிறைவு பெற்ற பிறகுதான் நின்று சொல்லும்

* ஆலப்பாக்கம்

* கரம்பாக்கம்

* வளசரவாக்கம்

* ஆழ்வார் திருநகர்

* விருகம்பாக்கம் தெற்கு

* சாலிகிராமம்

இந்த நிலையங்களில் நிற்காததற்கான காரணங்கள் :: இரு அடுக்கு மேம்பாலம் மற்றும் நிலையப் பணிகள் ; ஆழ்வார் திருநகர் முதல் போரூர் சந்திப்பு வரையிலான பாதை வழித்தடம் 4 மற்றும் வழித்தடம் 5 இணையும் இரு அடுக்கு மெட்ரோ கட்டமைப்பாகும் ; இதனால் இந்த நிலையங்களின் சிவில் வேலைப்பாடுகள் மற்றும் கட்டமைப்பு பணிகள் அதிக நுட்பம் வாய்ந்தவை. மேற்கண்ட நிலையங்களில் மின்சார பணிகள், எஸ்கலேட்டர்கள், நுழைவு/வெளியேறும் வழிகள் மற்றும் பயணிகளுக்கான நடைமேடை வேலைகள் இன்னும் நிறைவடையவில்லை.

ஒட்டுமொத்தப் பாதையையும் தாமதிக்காமல், உடனடியாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஏதுவாக பூவிருந்தவல்லி – போரூர் மற்றும் வடபழனி இணைப்பை மட்டும் முதற்கட்டமாகச் செயல்படுத்த நிர்வாகம் முடிவு செய்தது !!

இந்த நிலையங்கள் எப்போது செயல்பாட்டிற்கு வரும்?

* தவிர்க்கப்பட்ட 6 நிலையங்களின் எஞ்சிய பணிகளை விரைந்து முடித்து , அடுத்த கட்ட பாதுகாப்பு ஆய்வுகளுக்கு பிறகு படிப்படியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது !! பணிகள் முழுவதும் நிறைவு பெற்றால் மட்டுமே திறக்கப்படும்

வடபழனி சந்திப்பு மற்றும் பிற மெட்ரோ வழித்தடங்களுடனான இணைப்பு வசதிகள் (Interchange & Connectivity)

முதல் கட்டப் பச்சை வழித்தடத்துடன் இணைப்பு (Green Line)

>> வடபழனி நிலையம் ஒரு முக்கிய இணைப்பு முனையமாகச் (Interchange Station) செயல்படுகிறது !! இங்கு பயணிகள் இறங்கி தற்போது இயங்கும் பச்சை வழித்தடத்திற்கு மாறி ; கோயம்பேடு (CMBT), புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் அல்லது ///ஆலந்தூர் வழியாக சென்னை விமான நிலையம் எளிதாகச் செல்ல முடியும்.

(( பரங்கிமலை சென்று அங்கிருந்து தாம்பரம் செங்கல்பட்டு கடற்கரை புறநகர் ரயில் சேவைகளை பயன்படுத்தலாம் // அதேபோல் வேளச்சேரி வழியாக கடற்கரை வரை செல்லும் MRTS பறக்கும் ரயில் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்)

நீல வழித்தட இணைப்பு (Blue Line)

ஆலந்தூர் அல்லது சென்ட்ரல் நிலையங்களில் மாறி விம்கோ நகர், வண்ணாரப்பேட்டை, அண்ணா சாலை, கிண்டி மற்றும் ஏர்போர்ட் வழித்தடங்களுக்கு பயணிக்கலாம் ……

எதிர்கால இரண்டாம் கட்ட இணைப்பு ::

வழித்தடம் 5 (மாதவரம் – சோழிங்கநல்லூர்) போரூர்/ஆழ்வார் திருநகர் பகுதிகளில் இணையும்போது தகவல் தொழில்நுட்ப வழித்தடமான OMR பகுதிக்கு நேரடி இணைப்பு கிடைக்கும்.

வழித்தடம் 4 நீட்டிப்பு (வடபழனி – களங்கரை விளக்கம்) :: இப்பணி நிறைவடையும் போது நந்தனம் ( நீல வழித்தட இணைப்பு ) மற்றும் திருமயிலை ( ஊதா வழித்தடம் / MRTS இணைப்பு ) ஆகிய பகுதிகளுக்கு ஒரே ரயிலில் செல்ல முடியும் !! கடற்கரை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கம் வரையிலான மஞ்சள் வழித்தட பணிகள் முழுவதும் நிறைவு பெற்ற பிறகு இது சாத்தியமாகும் ……

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா9 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா4 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்5 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா5 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா24 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா2 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

Translate »
Come to us for super quality bags cotton tote factory..