கேலரி
இப்படியே போனா அடுத்து ஹீரோயின்தான்!… வைரலாகும் டிடியின் டாப் கிளாஸ் புகைப்படங்கள்..

விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்கிற நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களை ஜாலியாக பேட்டி எடுத்து ரசிகர்களிடம் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. தனது நீண்ட நாள் நண்பரையே திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து பிரிந்து விவாகரத்து பெற்றார். சினிமாவை பொறுத்தவரை தமிழில் பவர் பாண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தொலைக்காட்சியில் வி.ஜே. சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, சினிமாவில் நடிப்பது, ஆல்பம் பாடல்களை தயாரிப்பது, இன்ஸ்டாகிராமில் டப்ஷமாஷ் வீடியோக்களை வெளியிடுவது, அழகழகாக உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது என எப்போது பிஸியாக இருப்பவர்.

இந்நிலையில், குட்டைப்பாவாடையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நடிகைகளுக்கே டஃப் கொடுத்துள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இப்படியே போனா அடுத்து நீ ஹீரோயின்தான்’ என பதிவிட்டு வருகின்றனர்.












