இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

- ‘எனர்ஜி டிரிங்க்ஸ்’ என ஏமாற்றி விற்பனை: பெப்சிகோ, மான்ஸ்டர் நிறுவனங்கள் மீது FSSAI பரபரப்பு குற்றச்சாட்டு!
- ஒருவரை விசாரணைக்கு என்று போலீஸ் பிடித்துச் சென்றாலே கைது என்றுதான் பொருள் – உச்ச நீதிமன்றம் விளக்கம்
- தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களுக்கு தீபாவளியையொட்டி நாளை முதல் விடுமுறை: உயர்நீதிமன்றம் அறிவிப்பு 10 ம் தேதி வழக்கம்போல் நிதிமன்றங்கள் செயல்படும் என அறிவிப்பு.
- விளைநிலங்களை விவசாயம் அல்லாத பயன்பாட்டு நிலமாக மாற்றவும், கட்டுமானங்கள் மேற்கொள்ளவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழ்நாடு அரசு.நிலத்தின் கிரயம் அல்லது குத்தகைப் பத்திரம், பட்டா நகல் என 9 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பு. ஏற்கனவே உள்ள விதிகளில் புதிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளது தமிழக அரசு
- தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி என். ரமேஷ் அவரது தீர்ப்பில், முதலமைச்சரை விமர்சிக்கும் உரிமை சாதாரண குடிமகனுக்கும் உண்டு. அதே நேரம் சாதாரண குடிமகனின் உரிமையை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கும், காவல்துறைக்கும் உண்டு என்று கருத்து தெரிவித்துள்ளார்.
- தீபாவளியையொட்டி நாளை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வேலை நாள்: தமிழக அரசு அறிவிப்பு
