இந்தியா
மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியாவில் மொபைல் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தகவல்!
இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் என்பது வெறும் பேசுவதற்கான சாதனம் மட்டுமல்ல. வங்கிப் பரிவர்த்தனை, ஆன்லைன் பணம் செலுத்துதல், கல்வி, வேலைவாய்ப்பு, வணிகம் என நம்முடைய அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது.
ஆனால் சில நேரங்களில் என்ன நடக்கிறது?
ரீசார்ஜ் செய்தும் சரியாக நெட்வொர்க் கிடைப்பதில்லை! வீட்டிற்குள் மொபைல் சிக்னல் கிடைப்பதில்லை! இணைய வேகம் மிகவும் குறைவாக இருக்கிறது! அடிக்கடி அழைப்புகள் துண்டிக்கப்படுகின்றன! பணம் செலுத்தியிருந்தும் சேவை சரியாகக் கிடைப்பதில்லை!
வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டாலும் சரியான பதில் கிடைப்பதில்லை!
இதுபோன்ற பிரச்சினைகளை பலர் தினமும் சந்தித்து வருகின்றனர்.
இதற்கெல்லாம் ஒரு முக்கியமான மாற்றமாக TRAI (Telecom Regulatory Authority of India) தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் புகார் தீர்வு நடைமுறையில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
- தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ₹20 லட்சம் வரை அபராதம்!
வாடிக்கையாளர்களின் புகார்களை முறையாகக் கையாளாமல் இருப்பது, புகார்களைத் தவறாக முடித்து வைப்பது மற்றும் மேல்முறையீடுகளைச் சரியாகக் கையாளாதது போன்ற விதிமுறை மீறல்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நிதி அபராதம் விதிக்கப்படலாம்.
ஒரு சேவைப் பகுதிக்கு ஒரு காலாண்டில் அதிகபட்சமாக ₹20 லட்சம் வரை அபராதம் விதிக்க TRAI விதிமுறைகள் வழிவகுக்கின்றன.
- புகார் கொடுத்தால் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் மொபைல் சேவையில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் முதலில் உங்கள் நெட்வொர்க் நிறுவனத்தின் வாடிக்கையாளர் புகார் மையத்தில் புகார் பதிவு செய்யுங்கள்.
புகார் பதிவு செய்தவுடன் உங்களுக்கு Complaint Number (Docket Number) வழங்கப்படும்.
அந்த எண்ணை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
- புகார் தீர்க்கப்படவில்லை என்றால் என்ன செய்வது?
நிறுவனம் உங்கள் புகாரைச் சரியாகத் தீர்க்கவில்லை என்றாலோ, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலோ, அந்த நிறுவனத்தின் Appellate Authority (மேல்முறையீட்டு அதிகாரியை) அணுகலாம்.
புதிய திருத்தத்தின்படி மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு 30 நாட்களிலிருந்து 15 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டின் மீதான முடிவும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தெரிவிக்கப்பட வேண்டும்.
- TRAI என்ன நடவடிக்கை எடுக்கிறது?
வாடிக்கையாளர்களின் புகார்களை நிறுவனங்கள் எவ்வாறு கையாளுகின்றன என்பதை ஆய்வு செய்தல், செயல்பாடுகளைத் தணிக்கை செய்தல், புகார் தீர்வு விவரங்களைப் பரிசோதித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் நிறுவனங்களின் பொறுப்புணர்வை அதிகரிக்க TRAI முயற்சி செய்கிறது.
TRAI ஒவ்வொரு தனிப்பட்ட வாடிக்கையாளரின் புகாரையும் நேரடியாகத் தீர்க்கும் அமைப்பு அல்ல. முதலில் உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்திடமே புகார் அளிக்க வேண்டும். தீர்வு கிடைக்காவிட்டால் அதன் மேல்முறையீட்டு அதிகாரியை அணுக வேண்டும்.
