சினிமா
கடத்திட்டுப் போய் கல்யாணம் பண்ணிருவேன்; பட்டுப்புடவையில் பிரியங்கா மோகனை பார்த்து சூடான ரசிகாஸ்!

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன் தொடர்ந்து டான், எதற்கும் துணிந்தவன் படங்களில் நடித்து ஏகப்பட்ட இளம் ரசிகர்களின் லிட்டில் ஹார்ட்டுகளை கவர்ந்துள்ளார்.
சென்னையில் இன்று புதிதாக முக்தார்த் ஸ்டூடியோவை திறந்து வைக்க பிங்க் நிற பட்டுப்புடவையில் அழகு பொம்மையாக வந்த பிரியங்கா மோகனை பார்க்க திநகரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

அந்த விழாவில் சேலையை தனது கைகளால் அட்ஜெஸ்ட் பண்ணும் வீடியோ காட்சிகளை ரசிகர்கள் எடுத்துப் போட்டு ஜூம் செய்து பார்த்து வருகின்றனர். இப்படியொரு அழகு தேவதையை பார்த்ததே இல்லை என சோஷியல் மீடியாவில் ஜொள்ளு பார்ட்டிகளின் கமெண்ட்டுகள் கரைபுரண்டு ஓடுகிறது.
பிங்க் நிற பட்டுச் சேலையை அணிந்து கொண்டு கை வைக்காத ஜாக்கெட்டில் கவர்ச்சி சிலையாக காட்சி தந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இணையத்தின் ஹீட்டை அதிகரித்து இருந்தார். அந்த போட்டோக்களை பார்த்த நடிகை கீர்த்தி ஷெட்டி ஸ்லேயிங் என கமெண்ட் போட்டு பிரியங்கா மோகனை கண் வைத்துள்ளார்.

எங்களோட ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்கள் தான் இது என்று ஒரு ஜொள்ளுப் பார்ட்டி ரசிகரும், கடத்திட்டுப் போய் கல்யாணம் பன்னிருவேன் என ராகுல் என்கிற நெட்டிசனும் கமெண்ட் போட்டு பிரியங்கா மோகனின் அழகில் மயங்கிப் போயுள்ளனர்.
சிவகார்த்திகேயனின் டான் படத்திற்கு பிறகு தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் பீரியட் போர்ஷனில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியங்கா மோகன். அடுத்ததாக கவின் உடன் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.






















