Connect with us

இந்தியா

சர்ச்சையை கிளப்பிய TN2026 டிரெய்லர் – ஓட்டு வேட்டை பற்றிய அரசியல் நகைச்சுவைத் திரைப்படம்.

Published

on

நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி என்கிற நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள பொலிட்டிக்கல் சடையர் திரைப்படம் தான் TN2026.  கண்ணன் ரவி குரூப்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது .

சினிமாவில் பிரபல நட்சத்திரமாக திகழும் நட்டி தனது நடிப்புலக கவர்ச்சியை ஆதயாமாக பயன்படுத்த அரசியலுக்கு வருவது பற்றிய அரசியல் கலந்த நகைச்சவை படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் கதை , நட்டியின் தோற்றம் உட்பட அனைத்தும் தவெக தலைவர் விஜயை பிரதிபலிப்பதாக உள்ளதால் விஜய் ரசிகரகளிடையே படத்திற்கு பெரியளவில் கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது

நடிகரின் தனித்துவமான தோற்றத்தைப் பிரதிபலிக்கும் கதாநாயகனின் உடை மற்றும் ஒப்பனை, அதைத் தெளிவாகக் காட்டுகிறது. குறிப்பாக, இப்படத்திற்கு துபாயைத் தளமாகக் கொண்ட தொழிலதிபர் கண்ணன் ரவி நிதியுதவி அளித்துள்ளார். தமிழக ஆளும் கட்சியுடன் அவருக்கு இருக்கும் இணக்கமான உறவுகளின் காரணமாக, இந்த வெளியீடு தேர்தல் காலத்தை முன்னிட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு தந்திரோபாய ‘தாக்குதல்’ என்று பலர் கருதுகின்றனர்.

இதற்கிடையில், இந்தத் திட்டத்தின் வெளியீட்டு நேரம் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துள்ளது; தேர்தல் காலத்தில் அரசியல் கருப்பொருள் கொண்ட திரைப்படத்தை வெளியிடுவது வாக்காளர்களை நியாயமற்ற முறையில் பாதிக்கக்கூடும் என்று பலர் வாதிடுகின்றனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஏராளமான இணையவாசிகள் சமூக ஊடகங்களில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தை (CBFC) டேக் செய்து, தேர்தல் காலத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு இருப்பதை உறுதிசெய்யும் வகையில் படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கக் கோரியுள்ளனர்.

வியாழக்கிழமை (ஏப்ரல் 2) அன்று வெளியான படத்தின் டீசர், பார்வையாளர்கள் மற்றும் திரையுலகினரிடையே  குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது. கண்ணன் ரவி குழுமம் தயாரித்துள்ள இந்தப் படம், தளபதி விஜய்யின் அரசியல் பிரவேசத்தை பகடி செய்வது போல, ஒரு நையாண்டி அணுகுமுறையைக் கையாள்கிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. விஜய் கட்சித் தொடங்கியது முதல் திரைவாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் பல்வேறு விமர்சனங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறார் . அவரது கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சனையால் இதுவரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது.

சர்ச்சையை கிளப்பிய TN2026 டிரெய்லர்

இந்த நிலையில் உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி என்கிற நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் TN2026 . நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கின்ஸ்லி, தலைவாசல் விஜய், சித்ரா லக்ஷ்மன், ஆண்ட்ரூஸ், ஜாவா சுந்தரேசன், விஜி சந்திரசேகர், வடிவுக்கரசி, ஸ்ரீஜாரவி, தேவி மகேஷ் ஆதி குமார், அத்திராஜா ரோபோ, இந்திரராஜா ரோபோ, லொள்ளுசபா மாறன் மற்றும் பலர் நடித்துள்ள  இப்படத்தில் நட்டியின் தோற்றம் முதல் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகள் அனைத்தும் தற்போதைய தமிழக அரசியல் களத்தை பிரதிபலிக்கும் விதமாகவே அமைந்துள்ளன.

யார் இந்த கண்ணன் ரவி ?

விஜயின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த சென்சார் போர்டு இவ்வளவு நேரடியான ஒரு அரசியல் படத்திற்கு எப்படி தணிக்கை சான்றிதழ் வழங்கியது என்பதே விஜய் ரசிகர்களின் கேள்வி.

இப்படத்தை தயாரித்துள்ள கண்ணன் ரவி குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள  சில தகவல்கள் இதோ..…

இந்த கண்ணன் ரவி என்பவர், கடலூர் திட்டக்குடியில் இருந்து துபாய் சென்று சாதாரண பணியாளராக வேலைக்கு சேர்ந்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் மற்றும் பல நிறுவனங்களை துவங்கி தற்போது தமிழ்நாட்டில் முக்கிய விஜபியாக வலம் வருபவர். மேலும் KRG நிறுவனம் பெயரில் சில திரைப்படங்களை தயாரித்துள்ளார்.  இந்த TN2026 படத்தையும்தயாரித்துள்ளார். வரப்போகிற  சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில், திட்டக்குடி தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்படவுள்ள பட்டியலில் வேட்பாளராக தேர்வாகியுள்ள இரண்டு நபர்களில் ஒருவர் கண்னன் ரவி என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான ஜீவா நடிப்பில் தலைவர் தம்பி தலைமையில் படமும் இவரது தயாரிப்புதான். அதனால்தான் கடைசி காட்சியில். இப்படத்திலும் அமைச்சர் அன்பில் மகேஷை ட்ரோல் செய்யும் விதமாக ‘ரூல்ஸ ஃபாலோ பண்ணுங்கடா’ என்கிற வசனம் இடம்பெற்று பெரும் சர்ச்சையானது. தற்போது TN2026 திரைப்படமும் விஜய்க்கு எதிரான பாஜகவின் சதி என தவெக ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.

சதுரங்க வேட்டையைப் போலவே இந்த ஓட்டு வேட்டையும் மக்களின் மனதில் இடம் பிடிக்குமா?… பொறுத்திருந்து பார்ப்போம்…

 

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா15 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்1 மணி நேரம் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா7 மணி நேரங்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா7 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

சினிமா6 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா5 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

Uncategorized4 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

Translate »
P force fort 150 mg. محامي. Guglielmo contadina – venice : a neoclassical piano tribute to the city of water.