சினிமா செய்திகள்
இன்று தனுஷின் அடுத்த படத்தின் பூஜை: வைரல் புகைப்படங்கள்!

தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றதை அடுத்து அந்த பூஜையின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நடித்து முடித்துள்ள ’மாறன்’ மற்றும் ’திருச்சிற்றம்பலம்’ ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ் செய்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் தனுஷ் நடித்து முடித்துள்ள ’தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனுஷின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ’வாத்தி’ என்று கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது என்பதுன்ம் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்க உள்ளார் என்றும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ’வாத்தி’ திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த பூஜையில் தனுஷ் இயக்குனர் வெங்கி, நாயகி சம்யுக்தா மேனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 5ம் தேதி தொடங்க இருப்பதாகவும் மூன்றே மாதத்தில் இந்த படத்தை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்த படம் தனுஷ் நேரடியாக நடிக்கும் முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.






