சினிமா செய்திகள்
அஜித்தின் ’வலிமை’ தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றது யார்? போனிகபூர் டுவீட்!

தல அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான அதிரடி ஆக்சன் திரைப்படம் ’வலிமை’. இந்த படம் ஆக்ஷன் படமாக மட்டுமின்றி அம்மா சென்டிமென்ட் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் கலந்த படம் என ஏற்கனவே போனிகபூர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்
இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் வெளிநாட்டில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் அஜித்தின் ’வலிமை’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனங்கள் குறித்த தகவலை போனிகபூர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் சினிமா ஆகிய இரண்டு நிறுவனங்கள் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு நிறுவனங்கள் இந்த படத்தை இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகையை கொடுத்து பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் தான் கோபுரம் சினிமாஸ் நிறுவனம் என்று கூறப்படும் நிலையில் ’வலிமை’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையையும் அதே நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் அஜித் நடித்த முந்தைய படமான ’நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றது என்பது தெரிந்ததே.
அஜித் ஜோடியாக ஹூமா குரோஷி நடித்துள்ள இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயன் நடித்துள்ளார் என்பதும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் 50வது பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாக உள்ளதாக ஏற்கனவே போனிகபூர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
We at Bayview Projects & Zee Studios are happy to announce that the Tamil Nadu theatrical rights of our film #Valimai have been entrusted with Raahul of Romeo pictures @mynameisraahul and @Gopuram_Cinemas
— Boney Kapoor (@BoneyKapoor) March 29, 2021




















