Connect with us

சினிமா செய்திகள்

‘பாகுபலி’ பிரபாஸ் வாங்கிய காரின் மதிப்பு இத்தனை கோடியா?

Published

on

பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ரூபாய் 6 கோடி மதிப்புள்ள லம்போர்கினி அவென்டேடார் என்ற ஆடம்பர காரை பிரபாஸ் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த காரின் புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பிரபாஸ், ஜாக்வார்டு, பி.எ,ம்.டபிள்யூ, உள்பட ஒருசில ஆடம்பர கார்கள் வைத்திருக்கின்றார் என்பதும் அந்த வரிசையில் தற்போது லம்போகினி நிறுவனத்தின் அவென்டேடார் காரையும் வாங்கி உள்ளதாகவும் இந்த காரை தனது தந்தையின் பிறந்த நாளன்று பிரபாஸ் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கார் பிரபாஸ் வீட்டில் நிற்பது போன்றும், அவரது சகோதரர் உடனிருப்பது போன்றும், காரை ஓட்டிச் செல்வது போன்றும் உள்ள புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ் பாகுபலி மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு படங்களில் மட்டும் நடிப்பதற்கு ரூபாய் 60 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Books guides.