Connect with us

சினிமா செய்திகள்

சிம்பு-கெளதம் மேனன் படத்தில் இணைந்த ‘சர்கார்’ பட பிரபலம்!

Published

on

சிம்பு நடித்து முடித்துள்ள ’மாநாடு’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் அடுத்ததாக ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.

மேலும் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற திரைப்படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய பிரபலம் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’ விஜய் நடித்த ’சர்கார்’ உள்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்கு வசனம் எழுத இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஜெயமோகன் வசனம் எழுத ஒப்புக் கொண்டது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பதும் அவரது வசனத்தில் இந்த படம் மெருகேறும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் கௌதம் மேனன் படத்தில் வழக்கமாக பாடல்கள் எழுதும் தாமரை இந்த படத்திற்கும் பாடல்கள் எழுதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரகுமான், கவுதம் மேனன், தாமரை, சிம்பு, ஜெயமோக, என முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து உள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu. Det dröjde ända till 2000 talet innan elbilar började återfå sin plats på marknaden, drivet av en växande miljömedvetenhet och teknologiska framsteg. Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu.