சினிமா
தளபதி 67ல் அதிரடியாக இணைந்த அந்த ரொமான்டிக் இயக்குநர்.. அப்போ வெயிட்டான சம்பவம் வெயிட்டிங்!
Published
1 month agoon
By
Saranya
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ள அடுத்த படம் தளபதி 67 என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சமீபத்தில் படு சீக்ரெட்டாக வாரிசு படத்தின் மீதான கவனம் சிதறிவிடக் கூடாது என்பதற்காக பூஜையை சத்தமில்லாமல் போட்ட பின்னரும் படக்குழுவினர் ஒரு போட்டோ கூட வெளியிடாமல் சீக்ரெட் மெயின்டெயின் பண்ணி வருகின்றனர்.
ஆனால், என்னதான் ரகசியம் காக்கப்பட்டு வந்தாலும் ஒரு சில தகவல்கள் லீக் ஆகிவிடுவதை யாராலும் தவிர்க்க முடியாது. அதுபோலத்தான் தற்போது செம சூப்பரான ஹாட் அப்டேட் ஒன்று வெளியாகி தளபதி ரசிகர்களை உற்சாக மோடுக்கு கொண்டு சென்று இருக்கிறது.
தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அர்ஜுன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரியா ஆனந்த் கூட பட பூஜையில் கலந்து கொண்டார் என தகவல்கள் வந்த நிலையில், தற்போது ரொமான்டிக் இயக்குநரான கெளதம் வாசுதேவ் மேனன் விஜய்க்கு வில்லனாக முக்கியமான கதாபாத்திரத்தில் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார் என்பதை அவரே பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறி உள்ளார்.
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விஜய் யோஹான் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிக்க வேண்டியது. ஆனால், சில காரணங்களுக்காக அந்த படம் அப்படியே டிராப் ஆனது. அதன் பின்னர் பல முறை நடிகர் விஜய்க்கு எப்படியாவது கதை சொல்லி இயக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தார் கெளதம் மேனன்.
இந்நிலையில், தளபதி விஜய்யை இயக்க முடியவில்லை என்றால் என்ன அவருடன் இணைந்து நடிக்கலாமே என லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைந்து விட்டார் கெளதம் மேனன்.
You may like
-
த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த்.. தளபதி 67 படத்தில் ஆன்போர்ட் ஆன நடிகர்கள் லிஸ்ட்!
-
விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் யார் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு!
-
ஜிமிக்கி பொண்ணு பாடல் ரிலீஸ்; ராஷ்மிகாவின் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!
-
பிப்ரவரி 1,2,3… பெரிய சம்பவத்துக்கு ரெடியாகுங்க; இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த தளபதி 67 ஹின்ட்!
-
250 கோடி வசூல்! துணிவு படத்தை துரத்தி துரத்தி அடிக்கும் வாரிசு; போனி கபூர் அமைதியோ அமைதி!
-
‘தளபதி 67’ படத்தில் 6 வில்லன்கள்.. யார் யார் தெரியுமா?