Connect with us

சினிமா செய்திகள்

தனுஷின் ‘நானே வருவேன்’ டைட்டில் மாற்றமா? செல்வராகவனின் திடீர் முடிவு

Published

on

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திற்கு ’நானே வருவேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும், அந்த டைட்டில் ப்ரோமோஷன் செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே. கலைபுலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திடீரென ’நானே வருவேன்’ என்ற படத்தின் டைட்டில் மாற்றம் செய்ய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. ’நானே வருவேன்’ என்ற டைட்டிலில் ஏற்கனவே ஸ்ரீபிரியா இயக்கிய ஒரு திரைப்படம் கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் கமல் ஸ்ரீபிரியா நடித்த ’நீயா’ படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’நானே வருவேன்’ டைட்டில் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று இயக்குனர் செல்வராகவன், தனுஷ் நடிக்கும் அடுத்த படத்திற்காக தேர்வு செய்திருந்தார். இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் இந்த டைட்டில் தற்போது ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது இந்த டைட்டிலை மாற்ற படக்குழுவினர் செய்திருப்பதாக கூறப்படுகிறது. டைட்டில் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை படக்குழுவினர் தெரிவிக்க மறுத்துவிட்டாலும், ஸ்ரீப்ரியாவிடமிருந்து இந்த டைட்டிலை பெற அதிகாரபூர்வ அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய டைட்டில் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தனுஷ் 42’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதை அடுத்து அந்த படத்தை முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதம் செல்வராகவன் இயக்கும் படத்தில் படத்தில் இணைந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதால் மீண்டும் புதுப்பேட்டை கூட்டணி இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா9 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா9 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா9 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized5 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

Translate »
Biolinker gives you unlimited links, custom themes, and a built in store – free forever.