சினிமா செய்திகள்
’விக்ரம்’ வெற்றியை அடுத்து கமலுக்கு குவியும் வாய்ப்புகள்: இதில் சூப்பர்ஹிட் படத்தின் 2ஆம் பாகம்!

கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து கமல்ஹாசனுக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே ’இந்தியன் 2’ திரைப்படம் பாதியில் நிற்கும் நிலையில் அந்த படத்தை விரைவில் தொடங்கப் படக்குழுவினர் முடிவு எடுத்துள்ளனர். அனேகமாக செப்டம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி ’சபாஷ் நாயுடு’ என்ற திரைப்படத்தையும் தொடங்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசனின் சூப்பர்ஹிட் படமான வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க கவுதம் மேனன் திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்கு கமல்ஹாசன் ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு இறுதியில் துவங்க திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.
அது மட்டுமின்றி விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தையும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தயாரிக்க கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாகவும் இதுவும் அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
‘தசாவதாரம்’ படத்திற்கு பின்னர் மிகப்பெரிய வெற்றியை சந்திக்காத கமலஹாசன் தற்போது விக்ரம் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.