சினிமா
பிரியா பவானி சங்கர் மீது கடும் கோபத்தில் சிம்பு; அந்த மேட்டர் தான் காரணமா?

பத்து தல இசை வெளியீட்டு விழாவில் யாருமே செய்யாத ஒரு விஷயத்தை நடிகை பிரியா பவானி சங்கர் செய்தது நடிகர் சிம்புவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
எந்தவொரு பிரபலத்தையும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து வராமல் நடிகர் விஜய் வாரிசு ஆடியோ லாஞ்சில் செய்ததை போலவே ஒட்டுமொத்த கவனமும் தன் பக்கமே இருக்கும் வண்ணம் நடிகர் சிம்பு பத்து தல இசை வெளியீட்டு விழாவில் பார்த்துக் கொண்டார்.

#image_title
வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இயக்குநர் கெளதம் மேனன் உடன் அதிகமாக பேச்சுவார்த்தையையே சிம்பு வைத்துக் கொள்வதில்லை என்கின்றனர்.
பத்து தல இசை வெளியீட்டு விழாவில் அனைவருக்கும் இந்த பிரச்சனை பற்றி தெரிந்து தான் கெளதம் மேனனையே நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என்றும் இயக்குநர், தயாரிப்பாளர் என யாருமே அவர் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை என்றும் கூறுகின்றனர்.

#image_title
ஆனால், இதைப் பற்றி தெரிந்தோ தெரியாமலோ நடிகை பிரியா பவானி சங்கர் மற்றவர்களை எல்லாம் விட்டு விட்டு கெளதம் மேனன் புகழை மேடையில் பாட ஆரம்பித்தது நடிகர் சிம்புவுக்கு சரியான எரிச்சலை உண்டு பண்ணியதாக தற்போது பெரும் பஞ்சாயத்தே கிளம்பி உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இயக்குநர் கிருஷ்ணா எழுதி வைத்த லிஸ்ட்டில் கூட கெளதம் மேனன் இல்லாத நிலையில், பிரியா பவானி சங்கர் அவரை மறந்து விட்டீர்கள் என எடுத்துக் காட்டியும் கடைசியாக பேசிய சிம்பு பல இடங்களில் வெந்து தணிந்தது காடு படத்தின் பெயரை கூட கஷ்டப்பட்டு சொன்னார் என்றும் மேலும், அந்த படம் மாநாடு போல ஹிட் அடிக்கவில்லை என்பதால் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை எங்கேயுமே வெற்றிப்படம் எனக் கூறவில்லை என்றும் சிம்புவின் பேச்சை நோட் செய்து நெட்டிசன்கள் நோண்டி நொங்கெடுத்து வருகின்றனர்.
பத்து தல படத்தில் முக்கிய வில்லனாகவே கெளதம் மேனன் தான் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.