சினிமா
தூசு தட்டப்பட்ட துருவ நட்சத்திரம்; இந்த முறையாவது சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா?

கெளதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படம் பல வருடங்களாக கிடப்பில் கிடந்த நிலையில், தற்போது அந்த படத்தை தூசு தட்டி எடுத்து இருக்கிறார் கெளதம் மேனன்.
ஒன்றாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தது தான் கெளதம் மேனன் கடன் தொல்லையில் சிக்க காரணமே என்கின்றனர்.

#image_title
கடன் தொல்லையில் இருந்து மீள்வதற்காகவே சினிமாவில் நடிக்க ஆரம்பித்த கெளதம் மேனன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சீதா ராமம், ருத்ர தாண்டவம், குட்டி ஸ்டோரி, பத்து தல, லியோ என ஏகப்பட்ட படங்களில் நடித்து வர காரணமே என்கின்றனர்.
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த எனை நோக்கிப் பாயும் தோட்டா, கடந்த ஆண்டு சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படங்கள் பெரிதாக போகாத நிலையில், நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தை ஒரு வழியாக முடித்து விட்டார் என்றும் அந்த படத்தை சுற்றி இருந்த சிக்கல்களையும் முடிவுக்கு கொண்டு வந்து வரும் மே 19ம் தேதி படத்தை தியேட்டரில் வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

#image_title
இந்த முறையாவது கெளதம் மேனன் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் ஏஜென்ட் ஜானை ரசிகர்களுக்கு காட்டுவாரா என சியான் ரசிகர்கள் ரொம்பவே ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.