Connect with us

சினிமா செய்திகள்

ஜிவி பிரகாஷ் – கெளதம் மேனன் படத்தின் டிரைலர் ரிலீஸ்!

Published

on

ஜிவி பிரகாஷ் மற்றும் கெளதம் மேனன் முதல் முறையாக இணையும் ’செல்பி’ படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த டிரைலர் வீடியோ வைரலாகி வருகிறது

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ’ஜெயில் மற்றும் ’பேச்சிலர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க உள்ள புதிய படமான ’செல்பி’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது

கலைபுலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் மதிமாறன் என்பவரது இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் டிரைலரில் ஜிவி பிரகாஷ் பொறியல் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். அந்த கல்லூரியை நடத்தும் கௌதம் மேனனுக்கும் மாணவர் ஜிவி பிரகாஷ் இடையில் நடக்கும் பிரச்சனை விபரீதத்தில் முடிகிறது என்பதும் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது தான் இந்த படத்தின் கதை என்பது தெரிய வருகிறது

இந்த படத்தில் நாயகியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கத்துரை உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலரில் இருந்து இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் கல்வியில் எந்த அளவுக்கு சமூக விரோதிகள் நுழைந்து ஆட்டிப் படைத்து வருகிறார்கள் என்பதை தோலுரித்து காட்டும் படமாக இது இருக்கும் என்பதும் குறிப்பாக நீட் தேர்வு உட்பட பல்வேறு பிரச்சினைகள் இந்த படத்தில் காட்டப்பட்டிருப்பது இந்த படத்தில் இந்த டிரைலரில் உள்ள வசனத்தில் இருந்து தெரிய வருகிறது

இந்த படம் ஜிவி பிரகாஷ், கெளதம் மேனன் மற்றும் கலைப்புலி தாணுவின் வெற்றிப்படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?