Connect with us

ஆரோக்கியம்

நாம் உடலில் ரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள் எது?

Published

on

நம் உடலில் ரத்தம் உற்பத்தியாகத் தேவையான சத்துகளும், அவற்றைத் தரும் உணவுகளும்: (அடைப்புக்குறிக்குள் ஒரு நாளைக்கு பெரியவளுக்கு)

வைட்டமின் பி6 (1.3 முதல் 1.7 மி.கி.) – உருளைக்கிழங்கு, முழு தானியங்கள், பருப்பு, கோழி இறைச்சி, தக்காளி

வைட்டமின் பி12 (2.4மி.கி) – எண்ணெய், முட்டை, விலங்குகளின் ஈரல், இறால், மீன், பால் பொருள்கள், இறைச்சி.

ஃபோலேட் (400 மை.கி) – மாம்பழம், ஆரஞ்சு, கீரை

இரும்புச்சத்து (8மி.கி. மாதவிலக்கு நேரத்தில் 18 மி.கி) – ஈரல் நட்ஸ், இறைச்சி

ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கச் சாப்பிடவேண்டிய உணவுகள்:

ஹீமோகுளோபின். ‘ஹீம்’ என்றால் ‘இரும்பு’ என்று அர்த்தம். நம் உணவில் பழங்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. உணவில் இருக்கும் இரும்புச்சத்தும் ரத்தம் உருவாக ஒரு காரணம். உணவில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.

பேரீச்சை பழம்: (dates)

தினமும் நான்கு (100 கிராம் பேரீச்சையில் 277 கலோரிகள் உள்ளன; 0.90 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது.) பேரீச்சம் பழத்தைத் தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.

தர்பூசணி (Watermelon):

100 கிராம் தர்பூசணியில் 90 சதவிகிதம் தண்ணீர், 7 சதவிகிதம் கார்போஹைட்ரேட், 0.24 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளன.

அத்திப்பழம்: (Athipalam)

 

100 கிராம் அத்திப்பழத்தில் இரண்டு மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

சர்க்கரை பாதாமி பழம் (Apricot):

இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதில், கொழுப்புச்சத்தும் புரதச்சத்தும் குறைவாக உள்ளன. வைட்டமின்களும் சர்க்கரையின் அளவும் அதிகமாக இருக்கின்றன. கார்போஹைட்ரேட்டின் அளவு குறைவாகவும், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை அதிகமாகவும் இருக்கின்றன.

கொய்யாப்பழம்: (Guava)

100 கிராம் கொய்யாவில் 210 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. இரும்புச்சத்தை கிரகிக்க வைட்டமின் சி மிகவும் அவசியம். இதன் கலோரி அளவு 51. நார்ச்சத்து 5.2% இருக்கிறது.

பீட்ரூட் ஜுஸ்: (Beetroot)

தினம் 100ml. பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சை: (Grapes)

வாரம் 2 முறை, ஊற வைத்த கருப்பு உலர் திராட்டை – தினமும் 4 (100 கிராம் உலர்ந்த திராட்சையில் 23 சதவிகிதம் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.)

முருங்கை கீரை: (murungai keerai)

வாரம் 2 முறை, முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரிகள் உள்ளது.

சுண்டைக்காய்: (Turkey berry)

வாரம் 2 முறை, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக்கூடியது.

முளைக்கட்டிய சுண்டல்/ பாசிப்பயறு: (pasi payaru)

வாரம் 4 முறை, வைட்டமின்கள் பி 2, பி 3, பி 5, பி 6 மற்றும் செலினியம் உள்ளது. இதில் உள்ள காப்பர் சத்து சருமத்திற்குத் தேவையான இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தைப் பொலிவாக்குகிறது, மேலும் சருமத்தைப் பருக்கள், காயங்களிலிருந்து பாதுகாக்கிறது. இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை: (country sugar)

தினமும், 100 கிராம் வெள்ளைச் சர்க்கரையில், 398 கலோரிகள் இருக்கின்றன. அதில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துகளின் அளவுகள் மிகவும் குறைவு. வெள்ளைச் சர்க்கரை என்பது ரசாயனங்களின் மூலம் ப்ளீச் செய்யப்படுவது. அப்படி நம் உபயோகத்துக்கு வரும் வெள்ளைச் சர்க்கரையில், அந்த ப்ளீச்சின் மிச்சங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.

மாதுளை: (Pomegranate)

வாரம் 2 முறை (100 கிராம் பழத்தில், 0.30 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது.) தினமும் மாதுளம் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும்; ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும்.

பீர்க்கங்காய்: (Luffa)

வாரம் 2 முறை, 100 கிராம் பீர்க்கங்காயில் புரதம் 0.5%, கால்சியம் 40 மி.கி, பாஸ்பரஸ் 40 மி. கி, இரும்புச் சத்து 1.6 மி.கி, வைட்டமின் ‘ஏ’ 56%, ரிஃபோபிளவின் 0.01 மி.கி, தயாமின் 0.07 மி. கி, நிகோடின் அமிலம் 0.2 மி.கி, வைட்டமின் 5 மி.கி உள்ளது.

நெல்லிக்காய்: (Indian gooseberry)

தினமும் ஒன்று, நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து.

அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாற்றுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தமிழ்நாடு3 மணி நேரங்கள் ago

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு3 மணி நேரங்கள் ago

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17 வரை அவகாசம் நீட்டிப்பு

தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 ஜூன் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்12 மணி நேரங்கள் ago

வெள்ளிக்கிழமை காலை தங்க விலை அதிகரிக்கும் – உடனே ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்

வணிகம்13 மணி நேரங்கள் ago

ஈரான் தாக்குதல் ரத்து: தங்க விலை 2% உயர்வு – உலக சந்தையில் அதிரடி மாற்றம்

ஆட்டோமொபைல்14 மணி நேரங்கள் ago

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: குறைந்த செலவில் வாகனம் ஓட்ட 10 எளிய வழிகள்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

RBI FD விதிகளில் மாற்றம் வருமா? பணம் டெபாசிட் செய்தால் கிடைக்கும் 3 முக்கிய நன்மைகள்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

தங்கம் விலை ஏன் சரிகிறது? இருந்தும் ஏன் நிபுணர்கள் இன்னும் நம்பிக்கையுடன் உள்ளனர்?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 255 டெக்னீசியன் பணியிடங்கள்: 12-ம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.06.2026

தமிழ்நாடு7 நாட்கள் ago

தமிழக அரசியலில் அதிர்ச்சி திருப்பம்! பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை; ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கட்சி

சினிமா7 நாட்கள் ago

ஜூன் 19ல் ரிலீஸாகும் விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ 

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் ஆவின் பாலகம் தொடங்க அரிய வாய்ப்பு: தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

RRB டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2026: ரயில்வேயில் 6,565 காலிப்பணியிடங்கள்.. 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.06.2026

இந்தியா5 நாட்கள் ago

கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: “இது டிரெய்லர் மட்டுமே” – காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை

இந்தியா5 நாட்கள் ago

காக்ரோச் ஜனதா கட்சி இந்திய அரசியலில் பெரிய சக்தியாக வளருமா? வளர்ச்சிக்கு தடையாக இருப்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

2026-ல் 5 ஆண்டு FD-க்கு அதிக வட்டி எங்கு? ரூ.10 லட்சம் முதலீட்டில் எந்த வங்கி அதிக வருமானம் தருகிறது?

வணிகம்5 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆண்டுக்கு 8.2% வட்டி.. ரூ.1.09 லட்சம் முதலீட்டில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் பெறலாம்!

Translate »
For me, coding and music production are two sides of the same coin : it’s all about creating something impactful from scratch.