ஆரோக்கியம்
உடல் எடையைக் குறைக்கவும், சிறுநீர்க கோளாறுகளை நீக்கும் அருகம்புல் ஜுஸ்

அருகம்புல் ஜுஸ் வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்துகிறது. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களைக் குணப்படுத்துகிறது. உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீர் பெருக்கும், குடல் புண்களை ஆற்றும், இரத்தை தூய்மையாக்கும். உடலைப் பலப்படுத்தும், கண் பார்வை தெளிவுறும்.
மூட்டுவலி நீங்கும். தினந்தோறும் அருகம்புல் ஜூஸ் அருந்தினால் அதீத பசியைக் கட்டுப்படுத்தும். அருகம் புல்லில் எலும்புகளின் உறுதிக்குத் தேவையான மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துகள் நிறைந்து இருக்கின்றன.
நச்சுக்களும் வியர்வை, சிறுநீர்க கோளாறுகளை நீக்குகிறது. அருகம்புல் ஜூஸ் அருந்தச் சிறுநீரகங்களில் கற்கள் உண்டாவதைத் தடுத்து சிறுநீரை பெருக்கும். ஞாபக சதியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும்.
உடலில் ஏற்படும் துர்நாற்றம், தொற்றுநோய்களைக் குணப்படுத்துகிறது. ரத்த அழுத்தம் சீராகும். மலச்சிக்கலை நீக்குகிறது. சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகம் ரத்தப்போக்கு ஏற்படும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் குறைவாகக் கொண்ட உணவுகளை உண்ண வேண்டும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தினந்தோறும் காலை உணவு உண்பதற்கு முன்பு அருகம்புல்ஜூஸ் அருந்தி வந்தால் உடல் பருமன் மற்றும் உடல் எடை குறையும்.
தினந்தோறும் அருகம்புல் ஜூஸ் அருந்துவது இவர்களின் உடல்நலத்திற்கு நல்லது. சிலருக்கு வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் சமச்சீரற்ற தன்மையால் சாப்பிடும் உணவுகள் சரியாகச் செரிமானம் ஆகாமல் அஜீரணம், வாயுத்தொந்தரவுகள் ஏற்படும்.