இந்தியா
நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

நகைக்கடைகளில் தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்கும்போது, அவற்றைச் சிறிய பிங்க் நிறக் காகிதத்தில் சுற்றிக் கொடுப்பதைப் பலரும் பார்த்திருப்போம்.
வெல்வெட் பெட்டிகள், அழகான நகைப் பெட்டிகள் என நவீன பேக்கிங் முறைகள் வந்துவிட்டாலும், சில பாரம்பரிய நகைக்கடைகளில் இந்தப் பிங்க் நிறக் காகிதம் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இதற்குப் பின்னால் சில பயனுள்ள காரணங்கள் உள்ளன.
- பாரம்பரியத்தின் அடையாளம்
முன்பெல்லாம் விலை உயர்ந்த நகைகளைப் பாதுகாப்பாகப் பொதிந்து வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்க இந்த வகையான காகிதங்கள் பயன்படுத்தப்பட்டன. காலப்போக்கில் இது பல நகைக்கடைகளின் பாரம்பரிய அடையாளமாக மாறியது.
- நகைகளின் பளபளப்பைப் பாதுகாக்க உதவும்
சில நகைகளைப் பொதியப் பயன்படுத்தப்படும் பிரத்யேகமான Anti-Tarnish காகிதங்களில் உலோகங்களின் மேற்பரப்பில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களைக் குறைக்க உதவும் பாதுகாப்புப் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். குறிப்பாக வெள்ளி மற்றும் சில உலோகக் கலவைகளால் செய்யப்பட்ட நகைகளில் ஏற்படும் கருமை படிவதைத் தாமதப்படுத்த இவை உதவுகின்றன.
- தங்க நகைகளில் உள்ள மற்ற உலோகங்களுக்குப் பாதுகாப்பு
24 காரட் தூய தங்கம் எளிதில் மங்குவதில்லை. ஆனால் 22 காரட் போன்ற தங்க நகைகளில் தாமிரம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் கலந்திருக்கும். இவற்றில் சில உலோகங்கள் காற்று மற்றும் ஈரப்பதத்துடன் வினைபுரிந்து நிறமாற்றம் அடையலாம். சரியான பாதுகாப்புக் காகிதங்கள் இந்தப் பாதிப்பைக் குறைக்க உதவுகின்றன.
- கீறல்கள் ஏற்படுவதைக் குறைக்க உதவும்
நகைகளை ஒன்றோடொன்று உரசாமல் தனித்தனியாகப் பொதிந்து வைப்பதன் மூலம் சிறிய கீறல்கள் மற்றும் உராய்வுகளைக் குறைக்க முடியும்.


