சினிமா செய்திகள்
’வலிமை’ படத்தின் ’நாங்க வேற மாதிரி’ பாடல்: போனிகபூரின் அறிவிப்பு!

தல அஜித்தின் ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று இரவு வெளியாக இருப்பதாகவும் இது குறித்த தகவல் வெளியானதிலிருந்து அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர் என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் சற்று முன்னர் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘நாங்கள் வேற மாதிரி என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் இன்று இரவு பத்து நாற்பத்தி ஐந்து மணிக்கு வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் தற்போது நாங்க வேற மாதிரி என்ற ஹேஷ்டேக்கை வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
யுவன்சங்கர் ராஜா இசையில் அனிருத் குரலில் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் உருவான இந்த பாடலை இந்த பாடல் வெளியாக இன்னும் மூன்று மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அஜித், ஹூமா குரேஷ், கார்த்திகேயா, புகழ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் இந்த ஆண்டு ஆயுத பூஜை விடுமுறையின்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த பாடல் அப்டேட்டை யுவன்ஷங்கர் ராஜா, ஜான்வி கபூர் ஆகியோர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#NaangaVeraMaari the #ValimaiFirstSingle out at 10:45PM tonight on @SonyMusicSouth!
Marking #30YearsOfAjithKumar #Valimai #AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @sureshchandraa @VigneshShivN @humasqureshi @ActorKartikeya @RajAyyappamv pic.twitter.com/4QODM7Tmop
— Boney Kapoor (@BoneyKapoor) August 2, 2021






















