Connect with us

சினிமா செய்திகள்

தமிழ்நாட்டின் ஒரே தல! ஹேப்பி பர்த்டே அஜித் குமார்!

Published

on

பெரிதாக சினிமா பின்புலம் இல்லாமல் திறமை மற்றும் தன்னம்பிக்கை கொண்டு சாதிக்க முடியும் என நிரூபித்த மனிதர்களில் தல அஜித் குமாருக்கு தனி இடம் உண்டு.

1971ம் ஆண்டு உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி ஐதராபாத்தில் பிறந்தவர் அஜித் குமார்.

கார் ரேஸர் ஆன அஜித் குமார், தமிழில் அமராவதி படத்தில் அறிமுகம் ஆகும் முன்னே தெலுங்கில் 1992ம் ஆண்டு பிரேம புத்தகம் எனும் படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த புதுமுகம் விருதினையும் அஜித் பெற்றார்.

அமராவதி அஜித்திற்கு வெற்றிப் படமாக அமையவில்லை அடுத்தாண்டு அவர் நடிப்பில் வெளியான பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே படங்களில் நடித்தார்.

இதில், பவித்ரா படம் தான் அஜித்துக்கு தமிழ் திரையுலகில் தனி அடையாளத்தைக் கொடுத்தது. ராஜாவின் பார்வையிலே படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்தார் அஜித்.

1995ம் ஆண்டு வெளியான ஆசை படம் தான் அஜித்துக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் கலந்து கொண்ட அஜித்துக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் சில கால ஓய்வுக்கு பின், 1998ம் ஆண்டில் சரண் இயக்கத்தில் அஜித் நடித்த காதல் மன்னன் படம் அஜித்துக்கு நட்சத்திர அந்தஸ்த்தை ஏற்படுத்தி தந்தது.

விஜய் மற்றும் அஜித்துக்கு தனித்தனி ரசிகர்கள் கூட்டமும் உருவாகியது. தீனா படத்தில் ’தல’ என்ற வார்த்தையை ஏ.ஆர். முருகதாஸ் வசனமாக வைக்க அதுவே பின்னாளில் அல்டிமேட் ஸ்டார் பட்டத்திற்கும் மேலான பெரிய பட்டமாக மாறி இன்றளவும் நிலைத்து நீடிக்கிறது.

அமர்களம் படத்தில் நடிகை ஷாலினியுடன் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிய இன்றளவும் கோலிவுட்டின் சூப்பர் ஜோடிகளாக இருவரும் வலம் வருகின்றனர்.

தீனா, வாலி, காதல் கோட்டை, அமர்களம், அட்டகாசம், பில்லா, ஆரம்பம், வீரம், வரலாறு, வில்லன், விஸ்வாசம் என பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை அஜித் கொடுத்துள்ளார்.

அஜித்திற்கு உருவான ரசிகர்கள் கூட்டத்திற்கும் அன்பிற்கும் அளவே இல்லை. தோல்வி படங்களை தல தந்தாலும் அவரது ரசிகர்கள் அவரைப் போலவே மனம் தளராமல் அவருடைய பாச ரத்தங்களாக இன்றும் இருந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு வெளியான அஜித்தின் விஸ்வாசம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து அஜித் ரசிகர்களுக்கு தல பொங்கலை விருந்து வைத்தது. விரைவில் அவர் நடிப்பில் வெளியாகவுள்ள நேர்கொண்ட பார்வை படத்தை அஜித் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

அஜித் பிறந்த நாளை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அஜித்துக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Nordicnodes | free tools to grow your website & social media.