பல்சுவை
சுவையான இறால் பிரியாணி செய்வது எப்படி ….

தேவையான பொருட்கள்:::
இறால் : 1/2 கிலோ அரிசி : 2 ஆழாக்கு வெங்காயம், தக்காளி : 150 கிராம் இஞ்சி பூண்டு விழுது : 2 டீஸ்பூன் புதினா கொத்தமல்லி இலை : 1/4 கட்டு மிளகாத்தூள் : 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் : 1/4 டீஸ்பூன் தனியாதூள் : 1 டீஸ்பூன் பச்சைமிளகாய் : 4 தயிர் : 1 கப் எண்ணெய் : 1/2 குழிக்கரண்டி பட்டை : 2 லவங்கம் : 2 ஏலக்காய் : 2 உப்பு : தேவையான அளவு
செய்முறை :
இறாலை குடல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். * அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றவும். எண்ணை காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டுத் தாளிக்கவும். பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு- விழுது சேர்த்து வதக்கவும். * தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி இலை, புதினா இவற்றையும் சேர்த்து வதக்கவும். * மிளகாய்த்தூள், தனியாத்தூள், தயிர் சேர்க்கவும். * இறாலை நன்கு வதக்கிவிட்டு அரிசியைச் சேர்த்து வதக்கவும். * பாசுமதி அரிசிக்கு ஒன்றரை பங்கு நீரும், சாதாரண அரிசிக்கு இரு பங்கு நீரும் ஊற்றவும். சீரக சம்பா அரிசி என்றால் சூப்பராக இருக்கும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். `தம்’ போட்டு பிரியாணியை இறக்கிவிடவும்.
சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி தான் இதுவரை நீங்கள் சாப்பிட்டிருப்பீர்கள். இப்படி செய்து சாப்பிட்டுப் பாருங்கள். இனி அடிக்கடி செய்வீர்கள்.
