சினிமா செய்திகள்
சூப்பர் டீலக்ஸ் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய்சேதுபதி அரவாணி கெட்டப்பில் கலக்கவுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் அக்டோபர் 8ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.
செக்கச்சிவந்த வானம், 96 என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்துள்ள நடிகர் விஜய்சேதுபதி, அந்த மயக்கத்தில் இருந்து மீளாமல் தவித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு இன்பமான செய்தியை அறிவித்துள்ளார்.

தற்போது, தனது டுவிட்டர் பதிவில், ஒரு வழியா, ரொம்ப நாளா எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் திங்கட்கிழமை (அக்.,8) வெளியிடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆரண்ய காண்டம் எனும் கல்ட் சினிமாவை இயக்கிய குமாரராஜா தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தில், விஜய்சேதுபதி, சமந்தா மற்றும் பகத் பாசில் நடித்துள்ளனர்.

















