Connect with us

சினிமா

சயின்ஸ் ஃபிக்ஷன் கிரைம் த்ரில்லர், போலீசாக கவுதம் ராம் கார்த்திக்- புதிய அறிவிப்பு!

Published

on

இயக்குநர் சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார்!
தனித்துவமான, உள்ளடக்கம் சார்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து, பல அடுக்குகளுடன் கூடிய கதாநாயகன் கதாபாத்திரங்களில் திறமையை வெளிக்கொணர்ந்து வருகிற நடிகர் கவுதம் ராம் கார்த்திக், தற்போது வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
தனிஷ்தன் பெர்னாண்டோ, ராஜராஜன் கணநாசம்பந்தம், சஞ்சய் சங்கர் மற்றும் ஷைக் முஜீப் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த திரைப்படம், “நாளைய இயக்குநர் சீசன் 1” மூலம் அறிமுகமான இயக்குநர் சூரியபிரதாப் எஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கிறது. இவர், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் டைரக்டர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பெயரிடப்படாத திரைப்படம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கிரைம் த்ரில்லர் ஆக உருவாகவிருக்கிறது. இதில் கவுதம் ராம் கார்த்திக், ஒரு போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கூறியதாவது,
“நாங்கள் வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவத்தை தொடங்கிய முக்கிய நோக்கம் — நம்முடைய ஆர்வத்தையும் அனுபவத்தையும் கொண்டு தரமான கற்பனைதிறன் கொண்ட உள்ளடக்கங்களை உருவாக்குவதே. படங்கள், டிஜிட்டல் மற்றும் இசை துறைகளில் நாங்கள் முன்னதாகவே வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம், குறிப்பாக அண்மையில் வெளியான நம்முடைய ‘We Call Him Dhoni’ பெரும் வரவேற்பைப் பெற்றது.
தமிழ்சினிமா எப்போதும் உலக அளவில் பார்வையாளர்களை ஈர்க்கும் தனித்துவமான கதை சொல்லும் பாணியைக் கொண்டுள்ளது. இயக்குநர் சூரியபிரதாப் இந்த கதையை விவரிக்கும்போது, அவர் உணர்வுகளை நேரடியாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திறனை உணர்ந்தேன்.
நகைச்சுவையிலிருந்து மிக ஆழமான கதாபாத்திரங்கள் வரை, பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் தன்னை நிரூபித்தவர். இந்தப் படத்தில் அவர் ஒரு போலீசாக வரும் வகை, அவரது கேரியரில் ஒரு முக்கியமான அடையாளமாக மாறும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.”
இதற்கு முன் வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ், விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றிபெற்ற “பேச்சி” எனும் ஹாரர் த்ரில்லர் படத்தை கோ-ப்ரொடூஸ் செய்திருந்தது.
இந்த புதிய படத்தின் தொழில்நுட்பக் குழு விவரங்கள்:
•ஒளிப்பதிவாளர் – அர்ஜுன் ராஜா
•எடிட்டர் – ஜான் அபிராம்
•இசையமைப்பாளர் – வித்துசனன்
•தயாரிப்பு வடிவமைப்பு – பவனா கோவர்தன்
•ஆக்‌ஷன் இயக்கம் – மிராகிள் மைக்கேல்
•VFX துறை – ஹோகஸ் போகஸ் ஸ்டூடியோக்களின் சந்தகுமார்
•ஆடை வடிவமைப்பு – தீப்தி ஆர்.ஜே
•தயாரிப்பு மேலாளர் – தனலிங்கம்
•PRO – ரேகா
படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது, மேலும் படத்தின் பெரும்பாலான பகுதி சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடைபெறும். இதில் பலர் அறிந்த முகங்கள் நடிக்கவிருக்க, முழுமையான நடிப்பு பட்டியலை அடுத்த கட்ட அறிவிப்புகளில் வெளியிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வணிகம்7 மணி நேரங்கள் ago

10 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு இபிஎஸ் மூலம் மாதந்தோறும் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?

செய்திகள்7 மணி நேரங்கள் ago

தென்னிந்தியாவில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை!

வணிகம்7 மணி நேரங்கள் ago

8ஆவது ஊதியக் குழுவால் எஸ்பிஐ ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வு! புதிய சம்பள விவரம் இதோ!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

புதன் பகவான் அனுஷ நட்சத்திர பெயர்ச்சி 2025 – இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மலரும்!

biggboss
சினிமா7 மணி நேரங்கள் ago

பிக்பாஸ் 9 இல் இந்த வாரம் ரம்யா மற்றும் FJ எலிமினேட் – டபுள் எவிக்ஷன் சென்சேஷன்!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

இந்தியன் வங்கியில் தீ பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் – இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

கோயம்புத்தூர் பட்டீசுவரசுவாமி கோயிலில் வேலைவாய்ப்பு: 8ஆம் வகுப்பு படித்தால் போதும் – மாத சம்பளம் ரூ.36,800 வரை!

வணிகம்8 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும்? முழு விவரம் இங்கே!

உலகம்8 மணி நேரங்கள் ago

உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் டாப் 5 நாடுகள் – இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

புதன்-செவ்வாய் இணைவு 2025: சில ராசிகளுக்கு தொடங்குகிறது அதிர்ஷ்ட காலம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது சம்பள ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும்? முழு விவரம் இதோ!

வணிகம்6 நாட்கள் ago

நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள் – வங்கி கணக்குகள், ஆதார், ஓய்வூதியம், எஸ்பிஐ சேவைகள் உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 4.6% உயர்வு – ரூ.1.95 லட்சம் கோடி வருவாய்!

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்கள் அட்டை 2025: சுகாதாரம் முதல் பயணம் வரை பல நன்மைகள் – நவம்பர் 1 முதல் அமலுக்கு!

வணிகம்6 நாட்கள் ago

நவம்பர் 3 முதல் யுபிஐ விதிகளில் பெரிய மாற்றம் – கூகுள் பே, போன்பே, பேடிஎம் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்குள் வேலையை விட்டு வெளியேறினால் EPS ஓய்வூதியம் கிடைக்குமா? – இபிஎஸ் ஓய்வூதியம் பற்றிய முழு விவரம்!

வணிகம்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வேலையை விட்டு வெளியேறினால் EPS ஓய்வூதியம் கிடைக்குமா? – தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விதிகள்!

வணிகம்6 நாட்கள் ago

போஸ்ட் ஆபீஸின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: அரசாங்க உத்தரவாதத்துடன் பாதுகாப்பான முதலீடு, மாதாந்திர வருமானம் உறுதி!

வணிகம்6 நாட்கள் ago

8வது சம்பள ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு? – ஃபிட்மென்ட் ஃபாக்டரில் பெரிய மாற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலைய (01/11/2025)!

Translate »