சினிமா
மாநாடு படத்தை காப்பியடித்து மார்க் ஆண்டனியா? டீசரை விளாசும் சிம்பு ரசிகர்கள்!

த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மற்றும் பஹீரா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 80களின் கேங்ஸ்டர் படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட மார்க் ஆண்டனி படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்யை காலையிலேயே சந்தித்து தனது டீசரை போட்டுக் காட்டிய விஷால் தளபதி விஜய்யின் ஆசியை பெற்று அவரது ரசிகர்கள் மத்தியில் மார்க் ஆண்டனி டீசரை வைரலாக்கி உள்ளார்.

#image_title
மார்க் ஆண்டனி டீசர் வெளியான நிலையில், அந்த டீசரில் கேங்ஸ்டர் படத்துக்கு பதிலாக டைம் மெஷின் கான்செப்ட்டை ஆதிக் ரவிச்சந்திரன் படமாக்கி உள்ளார்.
சிம்புவின் மாநாடு திரைப்படம் டைம் லூப் கான்செப்ட்டில் படமாக்கப்பட்ட நிலையில், இந்த படம் டைம் மெஷின் கான்செப்ட்டில் உருவாகி இருப்பதை பார்த்த சிம்பு ரசிகர்கள் ஏற்கனவே அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் வச்சு செய்த காண்டில் தற்போது பதிலுக்கு இந்த படம் மாநாடு படத்தின் காப்பி என ட்ரோல் செய்து வருகின்றனர்.

#image_title
மேலும், ஆதிக் ரவிச்சந்திரனின் மேக்கிங் பார்த்தால் ஏதோ லொள்ளு சபா டிராமா போலத்தான் தெரிகிறது. படம் பார்த்த எஃபெக்ட்டே இல்லை பஹீராவில் வச்சு செய்த மாதிரி இந்த படத்திலும் பாவம் விஷாலை ஏமாற்றாமல் இருந்தாலே போதும் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன் எல்லாம் பார்க்கவே செம காமெடியாக இருக்கு என மரண பங்கம் செய்து வருகின்றனர்.
அதிலும் அவன் இவன் மாடுலேஷனில் விஷால் பேசும் வாய்ஸ் ஒன்றே போதும் படத்தை படுத்தப்படுக்கை ஆக்கி விடும் என்றும் துவைத்து எடுத்து வருகின்றனர்.