சினிமா
2000 டான்ஸர்களுடன் மரண மாஸ் டான்ஸ் ஆடப்போகும் விஜய்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் ஒத்து படத்திலேயே ஏகப்பட்ட டான்ஸர்களுடன் நடிகர் விஜய் வெறித்தனமாக ஆடியிருப்பார். இந்நிலையில், அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு லியோ படத்தில் ஒரு மரண மாஸ் டான்ஸை படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் என்றாலே முதலில் அனைவரது மனதில் வருவதும் அவரது அசத்தலான நடனம் தான். கடினமான ஸ்டெப்களையும் சர்வ சாதாரணமாக ஆடி அட்டகாசம் செய்து விடுவார்.

#image_title
ஏகப்பட்ட ஹிட் டான்ஸ் நம்பர்களை கொடுத்துள்ள விஜய் லியோ படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் வயதான தோற்றத்தில் நடித்து வரும் நிலையில், டான்ஸ் எல்லாம் இருக்காது என ரசிகர்கள் சற்றே மன வருத்தத்தில் இருந்தனர்.
ஆனால், ரசிகர்களை காயப்போட்டு விடக் கூடாது என நினைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 2000 டான்ஸர்களுடன் படு பிரம்மாண்டமாக ஒரு நடனத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்துக்காக அதிகபட்சமாக 500 டான்ஸர்களுடன் நடனமாடிய நிலையில், அதனை மிஞ்சும் அளவுக்கு 2000 டான்ஸர்களுடன் விஜய் நடனமாடப் போவதாகவும் இந்த பாடலையும் தினேஷ் மாஸ்டர் தான் கொரியோகிராஃபி செய்ய உள்ளார் என்றும்
இதற்காக 11 நாள் ரிஹர்சல் பார்க்கப்பட்டு அடுத்த 11 நாட்களில் பாடலை படமாக்கும் முடிவில் லோகேஷ் கனகராஜ் இறங்கி உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.