சினிமா
தென்காசி ஓட்டலில் சுடச்சுட தோசை சாப்பிட்ட சிவகார்த்திகேயன் ஹீரோயின்கள்.. பார்த்தாலே பசியெடுத்துடும்!

நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் தென்காசியில் படப்பிடிப்பில் உள்ள நிலையில், ஒரு ஓட்டலில் வகை வகையான தோசைகளை ஆர்டர் செய்து ஒன்றாக அமர்ந்து கொண்டு சாப்பிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் உடன் ரஜினி முருகன், ரெமோ, சீமராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். உன் மேல ஒரு கண்ணூ பாடல் மூலம் தமிழ்நாட்டு பசங்களை மொத்தமாக செஞ்சிவிட்ட ஓய் செல்ஃபி தான் கீர்த்தி சுரேஷ்.

#image_title
அதே போல சிவகார்த்திகேயன் டாக்டர், டான் என இரு 100 கோடி பட்ஜெட் படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷுடன் மிகுந்த நட்பாக பழகி வருகிறார்.
இருவரும் என்ன லெஸ்பியன்ஸா? என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு ட்ரோல் செய்யும் அளவுக்கு அடிக்கடி இருவரும் பல இடங்களில் தென்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தென்காசியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருவரும் தோசை சாப்பிட்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். ரகு தாத்தா படத்தின் ஷூட்டிங்கிற்கா கீர்த்தி சுரேஷும் தென்காசியில் தான் முகாமிட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்நிலையில், தான் இப்படியொரு சந்திப்பு நடந்துள்ளது.
தென்காசியில் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்திய நிலையில், தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு தடை விதிக்கக்கோரி ஆட்சியர் உத்தரவு போட்டது இன்னொரு பக்கம் பரபரப்பை கிளப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜெகதீஷ் ப்ளிஸின் தி ரூட் நிறுவனம் நடத்திய பொங்கல் விழாவில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன் கலந்து கொண்டு பொங்கல் வைத்த போட்டோக்கள் வெளியாகி இருந்தன.