Connect with us

உலகம்

குண்டு பெண்ணை விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிய ஊழியர்கள்.. அதன் பின் நடந்தது என்ன?

Published

on

கத்தார் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் குண்டாக இருந்த பெண்ணை விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரேசில் நாட்டின் மாடல் ஜூலியானா என்ற 38 வயது பெண் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் லெபனானின் பெய்ரூட் என்ற நகரத்தில் இருந்து தோஹா செல்வதற்காக விமானத்தில் எகானாமிக் வகுப்பில் டிக்கெட் எடுத்திருந்தார். இந்நிலையில் அவர் விமானத்தில் பயணம் செய்ய முற்பட்டபோது விமானத்தில் அவரை பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

கத்தார் ஏர்வேஸ் ஊழியர்கள் அவர் குண்டாக இருப்பதாகவும் அதனால் எகனாமிக் விமானத்தில் அனுமதிக்க முடியாது என்றும் கூறினர். 1000 டாலருக்கு மேல் எகானாமிக் டிக்கெட் எடுத்து இருக்கும் நிலையில் 3000 டாலருக்கு மேல் உள்ள பிசினஸ் வகுப்பு எடுத்தால் மட்டுமே அவர் அனுமதிக்கப்படுவார் என்று விமான ஊழியர்கள் கூறியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து ஜூலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் எகனாமிக் வகுப்பில் நான் குண்டாக இருந்த காரணத்தினால் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும் பிசினஸ் வகுப்பு எடுக்க என்னை கட்டாயப் படுத்தினார்கள் என்றும் அதுமட்டுமின்றி என்னை இறக்கிவிட்ட விமான ஊழியர்கள் என்னுடைய டிக்கெட் பணத்தையும் திருப்பித் தர மறுத்து விட்டனர் என்றும் கூறியிருந்தார்.

இந்த சம்பவம் தனக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், நான் குண்டாக இருக்கிறேன் என்று என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நான் எல்லோரையும் போலவே இருக்கிறேன் என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் தெரிவித்திருந்தார்.

அவரது இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் விமான நிலைய நிறுவனத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது விமான நிறுவனம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ‘ஜூலியானா குண்டானவர் என்பதற்காக இறக்கிவிடப்படவில்லை என்றும் அவர் முரட்டுத்தனமாகவும் ஆக்ரோஷமாகவும் ஊழியர்களிடம் நடந்து கொண்டார் என்றும் மேலும் அவரது குழுவில் இருந்த ஒருவர் கோவிட் சான்றிதழ் இல்லை என்பதால் அவருக்கு போர்டிங் மறுக்கப்பட்டது என்றும் கூறியிருந்தது. ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3718 டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்5 மணி நேரங்கள் ago

அமெரிக்க பெடரல் ரிசர்வ் முடிவால் ரூபாய் மதிப்பு சரிவு! டாலருக்கு எதிராக 94.66 ஆக தொடங்கிய இந்திய ரூபாய்

பர்சனல் ஃபினான்ஸ்5 மணி நேரங்கள் ago

வெள்ளியில் முதலீடு செய்ய நினைக்கிறீர்களா? நகையா, கட்டிகளா? எது சிறந்த தேர்வு?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்தியா5 மணி நேரங்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

ஆட்டோமொபைல்7 மணி நேரங்கள் ago

கார்களில் பெட்ரோல் டேங்க் ஏன் சிலவற்றில் இடது பக்கத்திலும், சிலவற்றில் வலது பக்கத்திலும் இருக்கிறது? இதுதான் காரணம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 ஜூன் 2026 (வியாழக்கிழமை)

இந்தியா24 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

சினிமா1 நாள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா1 நாள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

UPSC Prelims 2026 முடிவுகள் விரைவில் வெளியீடு? ஜூன் 15க்குள் ரிசல்ட் வெளியாக வாய்ப்பு.. அடுத்த கட்டம் என்ன?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

AAICLAS வேலைவாய்ப்பு 2026: மதுரை, திருச்சி விமான நிலையங்களில் 62 உதவியாளர் பணியிடங்கள்.. 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 255 டெக்னீசியன் பணியிடங்கள்: 12-ம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

கிரிக்கெட்7 நாட்கள் ago

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026: இந்திய அணி போட்டிகள் எப்போது? எந்த டிவி மற்றும் ஓடிடியில் பார்க்கலாம்? முழு விவரம்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17 வரை அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு6 நாட்கள் ago

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

TANUVAS-ல் திட்ட உதவியாளர் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. நேர்முகத் தேர்வில் நேரடியாக பங்கேற்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சேலம் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

BSNL-ல் 100 ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணியிடங்கள்: ரூ.40,500 வரை சம்பளம்.. ஜூலை 3க்குள் விண்ணப்பிக்கலாம்!

வணிகம்4 நாட்கள் ago

முதல் வேலை கிடைத்ததா? மத்திய அரசின் PM Viksit Bharat Rozgar Yojana திட்டத்தில் ரூ.15,000 வரை ஊக்கத்தொகை பெறலாம்!

Translate »
Nordicnodes | professional saas tools for everyone.