இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

- தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கைக்கு எதிராக டெல்லியில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார்.
- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.35 உயர்ந்து கிராம் ரூ.13570க்கும் சவரன் ரூ.108560க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.240க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.240000க்கும் விற்பனை ஆகிறது.
- நாகை துறைமுகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் த.வெ.க அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அதிகாரப் பிடியில் இருப்பதால் தான், அதே துறைமுகத்தைப் பயன்படுத்தி ஒரு த.வெ.க நிர்வாகியால் இவ்வளவு பெரிய கடத்தலை இப்படித் துணிச்சலாகத் திட்டமிட முடிந்ததா?- கழக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு. பரந்தாமன் அவர்கள்
- மதம் மாறிய கிறிஸ்தவர் பட்டியலினத்தில் பிறந்து பட்டியலின இந்து சான்றிதழ் வைத்திருந்தாலும் அவர் கிறிஸ்துவரே, பட்டியலின சலுகை பெற முடியாது – மதுரை கிளை – உயர் நீதிமன்றம் 2025 ஆம் ஆண்டு பிறப்பித்த ஆணை*
- புதிய தேர்வுக்குழுத் தலைவர் நியமனம்! இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் பிரக்யான் ஒஜா நியமனம் செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு. தேர்வுக் குழுவில் முன்னாள் வீரர் ரமேஷ் பவாருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
- கோயில் சொத்துக்களுக்கு மாநில அரசு உரிமையாளர் அல்ல, மாநில அரசு வெறும் பராமரிப்பாளர் தான் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.!
- தமிழகத்தை உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், உயிர் தப்பிய மாணவர்களில் ஒருவரான ஜெனிபர், இன்று தனது விடாமுயற்சியால் துணை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார்.


