தமிழ்நாடு
நடிகை யாஷிகாவை கைது செய்ய உத்தரவு: செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி!

கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியும் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜராகாததால் அவருக்கு எதிராக செங்கல்பட்டு நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.

#image_title
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலம் அடைந்தர். யாஷிகா கடந்த 2021- ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தபோது மாமல்லபுரம் அருகே கார் விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் யாஷிகாவின் நண்பர் வள்ளி பவானி செட்டி என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் யாஷிகா ஆனந்த கடந்த 21-ஆம் தேதி நேரில் ஆஜாரக வேண்டும் என நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், யாஷிகா ஆனந்த் ஆஜராகாததால் அவருக்கு எதிராக செங்கல்பட்டு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.