Connect with us

சினிமா செய்திகள்

இனி அமேசான் பிரைமில் நேரலையில் கிரிக்கெட் போட்டிகள்: அதிரடி அறிவிப்பு!

Published

on

அமேசான் பிரைம் வீடியோவில் இனி கிரிக்கெட் போட்டிகளையும் நேரலையில் காணலாம் என முன்னணி ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது பல ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல சுவராசியமான நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் அளித்து வருகிறது என்பது தெரிந்ததே.

அந்த வகையில் அமேசான் நிறுவனம் கிட்டதட்ட நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நிலையில் இந்நிறுவனம் தற்போது நியூசிலாந்து நாட்டின் நடைபெறும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நேரலையில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது

வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் நியூசிலாந்து நாட்டின் நடைபெறும்அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

முதல்கட்டமாக நியூஸிலாந்து மற்றும் வங்காள தேச நாடுகளுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்றும் அதன் பின்னர் அடுத்தடுத்து நியூசிலாந்து நாட்டின் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

சமீபத்தில் அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களான சந்தா தொகையை உயர்த்தியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி வந்த நிலையில் தற்போது இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Files are delivered instantly on purchase via secure time limited download links – no manual fulfillment ever..