சினிமா செய்திகள்
நடிக்காத படத்திற்கு புரமோஷன் செய்த நயன்தாரா!
Published
1 year agoon
By
Shiva
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மீது இருக்கும் ஒரே குற்றச்சாட்டு அவர் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கு வர மாட்டார் என்றும் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகும் போது புரமோஷனுக்கு வரமாட்டேன் என்று எழுதி கையெழுத்து வாங்கி விடுவார் என்றும் கூறப்படுவதுண்டு.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமாக இருந்தாலும், சிரஞ்சீவி படமாக இருந்தாலும் நயன்தாரா புரமோஷனுக்கு வரமாட்டார் என்பதும், மிக மிக அரிதாக ஒரு சில படங்களுக்கு மட்டுமே அவர் புரமோஷனுக்கு வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அவர் நடிக்காத படம் ஒன்றின் புரமோஷன் பாடலுக்கு அவர் நடித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படம் ’ராக்கி’. இந்த படம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. காலம் ஒரு துரோகி என்ற இந்த புரமோஷன் வீடியோவில் நயன்தாரா நடித்துள்ளார் என்பதும் அவரது காட்சி இந்த படத்தை பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா நடிக்காத ஒரு படமாக இருந்தாலும் இந்த படம் அவருடைய தயாரிப்பில் உருவான படம் என்பதால் அவர் இந்த புரமோஷன் வீடியோவில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வசந்த் ரவி, பாரதிராஜா உள்பட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’ராக்கி’ படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். தர்புகா சிவா இசையில், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
You may like
-
AK 62 படம் நல்லா பண்ணனும் ஐயப்பா! சபரிமலையில் விக்னேஷ் சிவன்; அஜித் ரசிகர்கள் வேண்டுதல்!
-
இனி டீசர், டிரைலர்களை டுவிட்டரில் பதிவு செய்ய முடியாதா? எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு!
-
அடேங்கப்பா.. நயன்தாரா – விக்னேஷ் ஷிவன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
-
தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடும் நயன் – விக்கி: வைரல் புகைப்படங்கள்!
-
வெளி இயக்குனர்கள் படங்களில் நடிப்பது இல்லை: நயன்தாரா அதிரடி முடிவு?
-
நடிகை நயன்தாரா மீது விசாரணை: விஜிலென்ஸ் அதிகாரிகள் முடிவு