சினிமா
நஷ்டத்தை ஏற்படுத்துமா ‘கைதி’ ரீமேக்?

‘கைதி’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘போலோ’ நஷ்டத்தை ஏற்படுத்துமா என பார்வையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக், நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கைதி’. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையையும் தமிழில் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெற்றது.

அஜய் தேவ்கன் நடிப்பில் இந்த படம் நேற்று முன்தினம் வெளியானது. 100 கோடி ரூபாய் தயாரிப்பில் இந்த படம் திரையரங்குகளில் வெளியானது. தமிழில் நரேன் கதாபாத்திரத்தில் இந்தியில் தபூ நடித்துள்ளார். பாலிவுட் படங்களுக்கான சில கமர்ஷியல் விஷயங்களும் சேர்த்து இந்த படம் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் இரண்டு நாட்களையும் சேர்த்து படம் வெறும் 18 கோடியை மட்டும் வசூல் செய்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இன்று வார விடுமுறை என்பதால் வசூல் கூடலாம் எனவும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நூறு கோடி ரூபாய் தயாரிப்பில் உருவானது இரண்டு நாட்களில் வெறும் 18 கோடியை மட்டும் வசூல் செய்திருப்பது வருத்தம் அளிக்கும் விஷயம் எனவும் ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.


















