சினிமா
திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கிய கேபிஒய் தீனா இன்று திடீரென தனது திருமணத்தை முடித்துக் கொண்டார்.
வீட்டில் பார்த்த பிரகதி எனும் பெண் உடன் திருமணத்தை முடித்துக் கொண்ட கேபிஒய் தீனாவின் திருமண புகைப்படங்கள் அவரது நண்பர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.

#image_title
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேபிஒய் தீனா பிரகதி தனது வீட்டில் பார்த்த பெண் என்றும் இனிமேல் தான் நாங்க லவ் பண்ணனும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று மணமேடையில் பிரகதியின் கழுத்தில் தாலி கட்டி குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து விட்டார் தீனா.
தனுஷின் ப. பாண்டி படத்தில் நடிகராக அறிமுகமான தீனாவுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடித்த கத்தி படத்தில் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.

#image_title
தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்த கேபிஒய் தீனா, கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் ஒரு சீனில் வந்து சென்றார். ஹரிஷ் கல்யாண் உடன் நண்பனாக டீசல் படத்தில் நடித்துள்ள தீனா திடீரென சினிமா பிரபலங்களுக்கு கூட அழைப்புக் கொடுக்காமல் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் செய்துக் கொண்டார்.
கேபிஒய் தீனா திருமணம் செய்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியான நிலையில், ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு திருமண வாழ்த்துக்களை சோஷியல் மீடியா மூலம் தெரிவித்து வருகின்றனர்.








