சினிமா
இந்தி சினிமா மீது மதிப்பில்லை’: காஜல் அகர்வால்!

இந்தி சினிமா மீது அதிக விருப்பமும் மதிப்பும் இல்லை என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழில் ‘நான் மகான் அல்ல’, ‘துப்பாக்கி’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த நடிகை காஜல் அகர்வால் தற்போது ‘இந்தியன்2’ படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், பாலிவுட் சினிமாவில், தென்னிந்திய சினிமாவில் இருக்கும் அளவுக்கு அறம் குறைவு என வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது, ” இந்தி தான் எனது தாய்மொழி. அந்த மொழி படங்களை பார்த்து தான் நான் வளர்ந்தேன். ஆனால் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு, இதில் இருக்கக்கூடிய அறம், மதிப்பு, ஒழுக்கம் போன்றவை பாலிவுட் சினிமாவில் மிகவும் குறைவு என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் நான் இந்தியில் அதிக கவனம் செலுத்தாமல் தென்னிந்திய படங்களிலேயே நடிக்க விரும்புகிறேன்.

நடிகர்கள் நிறைய பேர் தங்கள் வாழ்க்கையை பாலிவுட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்குக் காரணம் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதுதான். மற்றபடி தென்னிந்தியாவிலும் மிகச் சிறந்த நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் இருக்கிறார்கள். பாலிவுட்டை விட தென்னிந்திய படங்களில் அதிகம் கவனம் செலுத்தவே விரும்புகிறேன்.
இங்கேயும் ரசிகர்களுக்கு பிடித்தமான தனித்துவமான பல படங்கள் வெளியாகி வெற்றி பெறுகின்றன” என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.



















