Connect with us

சினிமா

சூர்யா படத்தோல்வி எதிரொலி; அமைதி காக்கும் இயக்குநர்!

Published

on

சூர்யா படத்தோல்வியால் பிரபல இயக்குநர் தனது அடுத்தப் படம் குறித்து இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்.

‘மெரினா’, ‘பசங்க’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் பாண்டிராஜ். நடிகர் கார்த்தியின் சினிமா பயணத்தில் இவர் கொடுத்த ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் அதிகமான ஃபேமிலி ஆடியன்ஸை அவருக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடிகர் சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை இவர் இயக்கியிருந்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை அடைந்தது. இது தயாரிப்பு தரப்புக்கு தோல்வியை கொடுத்துள்ள ஒரு படம் என்றும் பாண்டிராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டார்.

இந்த நிலையில் படம் வெளியாகி பல மாதங்கள் ஆன பின்பும் இன்னும் அவர் தனது அடுத்த படம் குறித்து அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். நடிகர் சூர்யாவை தொடர்ந்து மீண்டும் கார்த்தியை இயக்குவதற்கு கதை சொல்லிவிட்டு அவரது தேதிக்காக காத்திருந்தார் பாண்டிராஜ். ஆனால், நடிகர் கார்த்தி தற்போது ‘ஜப்பான்’, ‘சர்தார்2’ உள்ளிட்டப் படங்களில் பிஸியாக இருப்பதால் பாண்டிராஜுக்கு பதில் தராமல் போகவே, விஷாலை அணுகி இருக்கிறார். விஷால் சம்மதம் தெரிவித்த போதும் அவர் தற்பொழுது அடுத்தடுத்து பிரச்சினைகளில் சிக்கி வருவதால் அவர் வேண்டாம் என பாண்டிராஜ் தரப்பு ஒதுங்கி இருக்கிறது.

இதனை அடுத்து தற்போது வெளியாகியுள்ள ‘விடுதலை’ படத்தின் மூலம் நடிகர் சூரி கதையின் நாயகனாக மிகப்பெரிய கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். சூரியும் பாண்டிராஜூம் நெருக்கமானவர்கள் என்பதால் சூரியை வைத்து தற்பொழுது ஒரு படம் இயக்க முடிவு செய்து இருக்கிறார் பாண்டிராஜ். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம். நடிகர் சூரி ‘விடுதலை’ படத்திற்கு பிறகு ‘கொட்டுக்காளி’ படத்தில் பிசியாக இருக்கிறார். இதற்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்களை குறைத்துக் கொண்டு கதையில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலேயே நடிகர் சூரி அதிகம் நடிப்பார் எனத் தெரிகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Thần Đạo Đan tôn. Förutom den visuella aspekten är det viktigt att hålla bilen tekniskt i skick. Vui lòng đăng nhập vào tài khoản của bạn.